இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த...
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்திருந்த நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது.
இது தொடர்பாக விராட் கோலி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “14 ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெஸ்ட் கிரிக்கெட்...
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டுள்ள 3 நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது.
தனது 2-வது சதத்தை...
வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ்-2 சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஓஜாஸ் தியோதலே, அபிஷேக் வர்மா, ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கால் இறுதி சுற்றில் 239-232 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தியது.
தொடர்ந்து அரை இறுதி சுற்றில் இந்திய அணி 232-231 என்ற கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. வரும்...
இந்திய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு அத்துமீறி வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இந்த சூழலில் தரம்சாலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த ஆட்டம் மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் வியாழக்கிழமை 8.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.
இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. இந்த அணிகளை தவிர மீதமுள்ள 7 அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. லீக் சுற்றில் இன்னும் 14 ஆட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கவில்லை.
எனினும்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத...
எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நிலைமையை மாற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 236 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 199...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 48 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்ரேஸ் ஐயர் 25 பந்துகளில், 54 ரன்களும்...









