Google search engine
சு​விட்​சர்​லாந்​தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ஆடவருக்​கான இரட்​டையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி​யானது டென்​மார்க்​கின் கிறிஸ்​டியன் ஃபாஸ்ட் கேஜர், ராஸ்​மஸ் கேஜர் ஜோடி​யுடன் மோது​வ​தாக இருந்​தது. ஆனால் போட்​டிக்கு முன்​ன​தாக சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டிக்கு திடீரென வலது தோள்​பட்​டை​யில் வலி ஏற்​பட்​டது. இதனால் கால் இறுதி சுற்​றில் இருந்து சாட்விக், ஷிராக்​...
தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் உலக குத்துச்சண்டை ஃபியூச்​சர்ஸ் கோப்பை நடை​பெற்று வருகிறது. இதில் ஆடவருக்​கான 48 கிலோ எடை பிரிவு கால் இறுதி சுற்​றல் இந்​தி​யா​வின் கன்​ஜன் 5-0 என்ற கணக்கில் அஜர்​பைஜானின் குலார் ஹுசைனோவா வீழ்த்தி அரை இறுதிக்கு முன்​னேறி​னார். 54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஜாய் தேவி, ஜப்​பானின் யூரா கனேமருவை தோற்​கடித்து அரை இறுதி சுற்​றில் நுழைந்​தார். 50 கிலோ...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்​பாப்வே அணியை சேர்ந்த வேகப்​பந்து வீச்​சாள​ரான பிளெசிங் முசரபானியை ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. ஐபிஎல் வாய்ப்​பைப் பயன்​படுத்​திக் கொள்​ளும் வகை​யில், முசர​பானி பாகிஸ்​தான் சூப்​பர் லீக் ஒப்​பந்​தத்​தைக் கைவிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. சமீபத்​தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசர​பானி சிறந்த செயல் திறனை வெளிப்​படுத்​தி​யிருந்​தார். இந்​தத் தொடரில் அவர், 13 விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யிருந்​தார். 6 அடி 8...
ஐபிஎல் கிரிக்​கெட் திரு​விழா வரும் 28-ம் தேதி பெங்​களூரு​வில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதையொட்டி இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் அனைத்து அணி​களும் கடந்த சில வாரங்​களாக தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ), ஐபிஎல் அணி​களுக்​கான பயிற்சி வழிகாட்டுதல்களை அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக அனைத்து அணி​களுக்​கும் 5 பக்​கங்​கள் கொண்ட வழிகாட்டு நெறி​முறை​களை பிசிசிஐ அனுப்பிவத்துள்ளது. இதன்​படி எதிரணி​கள் தங்​களது வலைப்பயிற்சி​யின் போது பயன்​படுத்​திய...
இந்​திய அணிக்கு நடப்​பாண்​டில் ஏற்​கெனவே போட்​டிகள் நிறைந்த கால அட்​ட​வணை உள்​ளது. இந்நிலை​யில் வரும் 2027-ம் ஆண்டு தென் ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெற உள்ள ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்​பைக்கு முன்​ன​தாக, இருதரப்பு தொடர்களில் கூடு​தல் ஒரு​நாள் போட்​டிகளை சேர்க்குமாறு பல்​வேறு கிரிக்​கெட் வாரி​யங்​கள் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்​துள்​ளன. இந்த வகை​யில் இந்​திய அணி வெளி​நாடு​களுக்​குச் சுற்றுப்​பயணம் மேற்​கொள்​ளும்​போது இருதரப்பு ஒரு​நாள் போட்​டிகளின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கு​மாறு இங்​கிலாந்​து, நியூஸிலாந்​து,...
சமீபத்​தில் நிறைவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்​பை தொடரில் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்திருந்​தது. இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி 96 ரன்கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்து இருந்​தது. இந்​நிலை​யில் 24 அணி​கள் கலந்து கொண்ட இந்​தத் தொடரில் ஒவ்​வொரு அணிக்​கும் வழங்​கப்​பட்ட பரிசுத் தொகையை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணிக்கு சுமார் ரூ.25...
அமெரிக்​கா​வின் இந்​தி​யன் வெல்ஸ் நகரில் இந்​தி​யன் வெல்ஸ் மாஸ்​டர்ஸ் டென்​னிஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் இரட்​டையர் பிரிவில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் இந்​தி​யா​வின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரன்​சன் ஜோடி, செக்​குடியரசின் ஜிரி லெஹெக்​கா, நெதர்​லாந்​தின் சாண்டர் அரெண்ட்ஸ் ஜோடியை எதிர்த்து விளை​யாடியது. ஒரு மணி நேரம் 14 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் யுகி பாம்ப்​ரி, ஆண்ட்ரே கோரன்​சன் ஜோடி 6-4, 6-4...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் நிறைவடைந்​துள்ள நிலை​யில் பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும் பந்து வீச்​சாளர்​களுக்​கான தரவரிசை பட்​டியல் வெளியிடப்​பட்​டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 875 புள்​ளி​களு​டன் முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக அபிஷேக் சர்மா அரை சதம் விளாசி​ய​தால் தரவரிசை​யில் சரிவை சந்​திக்​க​வில்​லை. மற்​றொரு அதிரடி வீர​ரான இஷான் கிஷன் 871 புள்​ளி​களு​டன் 2...
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்​தி​யா​வின் பல்​வேறு நகரங்​களில் நடை​பெற உள்​ளது. இதற்​கிடையே தமிழ்​நாடு, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ள​தால் ஐபிஎல் தொடருக்கான அட்​ட​வணை வெளி​யிடு​வ​தில் தாமதம் நிலவி வந்தது. இதற்​கிடையே 19-வது சீசனுக்​கான ஐபிஎல் போட்டி அட்​டவணை 12-ம் தேதிக்​குள் வெளி​யிடப்​படும் என பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா தெரி​வித்​திருந்​தார்....
2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய அணியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். முன்னாள் கேப்டனும் லெக் ஸ்பின்னரும் அதிரடி பேட்டருமான ஷாஹித் அஃப்ரீடி 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் எப்படி தோனி படை தங்களை கடும் அழுத்தத்திற்குக் கொண்டு சென்றது என்பதைப் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் ஊடகமான சாம்னா டிவியில் அஃப்ரீடி இது தொடர்பாகக் கூறும்போது, மொஹாலி நினைவுகளை பகிர்ந்த ஷாஹித் அஃப்ரிடி –...