சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் தூய்மைப் பணி சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி, அடையார் மண்டலத்துக்கு உட்பட்ட 169-வது வார்டு, தாடண்டர் நகர் அரசு குடியிருப்பு பகுதி, 70.73 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 1844 குடியிருப்புகள் உள்ளன. மேலும் 1500 குடியிருப்புகள் வரவுள்ளன. இவ்வளாகத்தில் தூய்மைப் பணி மற்றும் இதர பராமரிப்பு பணிகள்...
ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழப்பு: கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதி முதியவர் மரணம்
admin - 0
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார். 4 கார்களும் சேதம் அடைந்தன. அரும்பாக்கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரியாணி கடை வழியாக நேற்று காலை 6.10 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தை தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்பவர்...
இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்
admin - 0
கடலூர் ரயில் விபத்து சம்பவம் எதிரொலியாக, இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் அறிவுறுத்தி உள்ளார். கடலுார் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதிய சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத பகுதிகளில் உள்ள லெவல் கிராசிங்...
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்கி, 36 தொகுதிகளுக்கு செல்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டங்களை அறிவித்து வருகிறது.
இதனிடையே “மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை பழனிசாமி கோவையில்...
திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு தங்கச் சங்கிலி, செங்கோல் மற்றும் அங்கி அணிவிக்கும் விழா நடந்தது. அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, எம்.பி. அண்ணாதுரை, ஆட்சியர் க.தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மேயர் நிர்மலா வேல்மாறனுக்கு தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் வழங்கி, மேயருக்கான அங்கியை அணிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இங்கு...
மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு கணக்கீட்டு கருவியை மின்வாரியம் கொள்முதல் செய்து தர மின் ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்
admin - 0
மின் கணக்கீட்டு பணியாளர்களுக்கு, கணக்கீட்டு கருவியை மின்வாரியமே கொள்முதல் செய்து தர வேண்டும் என, தமிழக மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 44 மின் வட்டங்களில், ஒவ்வொரு மின் வட்டத்துக்கும் 10 பிரிவு அலுவலகங்களை தேர்வு செய்து, அதில் பணிபுரியும் கணக்கீட்டாளர்கள் தங்களின் ஆன்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி மின்வாரியத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து கணக்கீட்டு பணியை செய்ய மின்வாரிய...
சங்க கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பதில் தகராறு: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினரிடையே மோதல்
admin - 0
விருதுநகரில் சங்கக் கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 44 பேரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் முத்துராமலிங்கம் தெருவில் 3,700 சதுர அடியில் கட்டிய அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் உள்ளது. கடந்த 2019-ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அன்பரசனுக்கும், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,...
பழநி மலையில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைப் பகுதியில் மத்திய புவியியல் துறை மூலம் மாலிப்டினம் உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாலிப்டினம் சுரங்கம் தோண்டி எடுத்தால் பழநி மலைப் பகுதிகள் அனைத்தும் அழிந்து போகும்.
பழநி மலையின்...
காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு பணியில் உள்ளவர்கள் தமிழ் மொழி அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி தாள் இடம்பெற்றுள்ளது.
அதில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்தகட்ட தேர்வு நடைமுறைக்குச் செல்ல முடியும். ஆனால் டிஎன்பிஎஸ்சி-க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு...
தேனி வனப் பகுதியில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். மதுரை மாவட்டம் விராதனூரில் ‘மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’ என்ற பெயரில் ஆடு-மாடுகள் மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில் சீமான் பேசியதாவது: ஆடு, மாடுகள் எங்களின் செல்வங்கள். எங்கள் வாழ்க்கை, கலாச்சாரத்துடன் இணைந்து வாழும் உயிரினங்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் உறவினர்போல ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறோம்....










