மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்: கொசு உற்பத்தியை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – நீதிமன்றம் கேள்வி
admin - 0
மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கொசுக்களின் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
கொசுக்கடியால் குழந்தைகளும், முதியோரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....
மகனை பறிகொடுத்த தாய்க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டதா?
admin - 0
மகனை பறிகொடுத்த தாய்க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரின் மகனான ராதாகிருஷ்ணன் தனது நண்பர் சுரேஷுடன் கடந்த 2018 ஆக.4 அன்று நண்பரின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அடையாறு பாலம் அருகே அவரை மடக்கி சோதனையிட்ட போக்குவரத்து...
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
admin - 0
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பெயர் மற்றும் முகவரியை தவறாகப் பயன்படுத்தி வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பெயரைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தவறான தகவல்கள் பல்வேறு செல்போன் எண்களுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தன.
இதையடுத்து எழுப்பப்பட்ட புகார்களை தொடர்ந்து, தவறான தகவல்களை...
அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
admin - 0
காஸ் தட்டுப்பாடு வரும்பட்சத்தில் அரசு மருத்துவமனைகளில் மின்சார ஸ்டவ், விறகு அடுப்புகளை தயார் நிலையில் வைக்குமாறு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1.15 கோடியில், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்புக் கூடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதியின் மூலம் இயன்முறை பயிற்றுநர் நியமிக்கப்பட்டு, ரூ.1.50 லட்சத்தில் புதிய இயன்முறை கருவிகளின்...
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கேட்டபோது, இந்தியன் ஆயில் நிறுவன விநியோகஸ்தர்கள் கூறுகையில், “ஒரு சிலிண்டருக்கும் மற்றொரு சிலிண்டருக்கும் பதிவு இடைவெளி 21 நாட்களாக இருந்தது.
தற்போது 28 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்தால், 4 முதல் 5 நாட்களுக்கு பிறகே வீட்டுக்கு வரும்” என்றனர். இதற்கிடையே, சென்னையில் பல இடங்களில் எல்பிஜி காஸ் நிரப்பும் மையங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆட்டோ ஓட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.
பெருங்குடி, எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் ஒப்பந்தம்
admin - 0
பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலம் அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓஎம்ஆர் சாலை பகுதியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வரும் மேம்பால மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் திட்ட அமலாக்கத்தில் தேவைப்படும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மேம்பாலங்களை அமைக்கும் பணியை மாநில...
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழகம்: தமிழக அரசு பெருமிதம்
admin - 0
‘கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் உருவாகியுள்ளது’ என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் உருவெடுத்துள்ளது.
இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தவும், சிதறிக் கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டவும், அவர்களை மனஉறுதி படைத்தவர்களாக உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான...
2047-க்குள் வளர்ந்த இந்தியா இலக்கை எட்ட உயர்கல்வி, ஆராய்ச்சிக்கு தேசிய அளவில் முன்னுரிமை: பிரதமருக்கு பாலகுருசாமி கடிதம்
admin - 0
“2047-க்குள் வளர்ந்த இந்தியா” இலக்கை எட்ட வேண்டுமானால், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தேசிய அளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் பாலகுருசாமி பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா தனது வரலாற்றில் இன்று மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது.
சுதந்திரத்தின்...
ரயில் பயணிகளிடம் காணாமல் போன ரூ.62.91 லட்சம் மதிப்புள்ள 205 செல்போன்களை, ரயில்வே பாதுகாப்பு படை ஒப்படைத்துள்ளது. மத்திய தொலை தொடர்பு துறையில், ரயில்வே பாதுகாப்பு படைக்கு (ஆர்பிஎஃப்) சில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில்களில் காணாமல் போகும் பயணிகளின் செல்போன்களை உடனுக்குடன் மீட்டு, ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளிடம் திருடு அல்லது காணாமல் போன செல்போன்கள் குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை உரிய புகார்களை பெறும்.
இதையடுத்து, சென்ட்ரல்...
எழும்பூர் நிலையத்தில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்க மின் ஏலம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
admin - 0
எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில், நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்குமான மின் ஏல அறிவிப்பை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணிகளின் வசதிக்காக இரண்டு பிரம்மாண்டமான பல்நோக்கு வணிக வளாக கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளன.
காந்தி - இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய இரு புறங்களிலும் அமைந்துள்ள இந்தக் கட்டிடங்களில் வணிக அங்காடிகள் மற்றும் நவீன அடுக்குமாடி வாகன...










