அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைவதில் கிராம அஞ்சல் ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்: மத்திய இணையமைச்சர் புகழாரம்
admin - 0
அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைவதில் கிராம அஞ்சல் ஊழியர்கள் முக்கிய பங்காற்றுவதாக மத்திய இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்தார்.
தமிழக அஞ்சல் துறை சார்பில், கிராம அஞ்சல் ஊழியர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தொலைத் தொடர்பு துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தமிழக அஞ்சல் வட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 10 சிறந்த கிராம அஞ்சல் ஊழியர்களைப் பாராட்டி...
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்பாபு - தனலட்சுமி தம்பதியினர். ஆனந்த்பாபு மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் கர்ப்பமாக இருந்த தனலட்சுமி, பிரசவ தேதி தாண்டியதை அடுத்து, புரசைவாக்கத்தில் இயங்கி வரும் மாநகராட்சி 24...
தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.1,035 கோடிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு: 1.3 லட்சம் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
admin - 0
தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 366 நிலுவை வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,034.93 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் -அதாலத் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான எஸ்.ஏ. தர்மாதிகாரி அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும்...
பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சமமான ஊதிய திருத்தத்தை உறுதி செய்ய வேண்டும்: பாரதிய மின் பொறியாளர் கழகம் வலியுறுத்தல்
admin - 0
பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சமமான ஊதிய திருத்தத்தை உறுதி செய்ய வேண்டும் என, பாரதிய மின் பொறியாளர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, பாரதிய மின் பொறியாளர் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மின்வாரியத்திலும் அதன் நிறுவனங்களிலும் ஊதிய மாற்றங்கள் எப்போதும் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும், அதாவது, வகுப்பு 1 மற்றும் 2 பொறியாளர்கள், அதிகாரிகள் முதல் வகுப்பு 3 மற்றும் 4 ஊழியர்கள்...
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விவகாரம்: மக்கள் பீதி அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தல்
admin - 0
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விசயத்தில் மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போரால், இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிகப் பயன்பாட்டுக்கான காஸ் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
பல இடங்களில் உணவுப் பட்டியல் குறைக்கப்பட்டுள்ளன. வணிக சிலிண்டர் பாதிப்பு இருக்கும் நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை...
வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க உதவி எண்கள்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
admin - 0
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல் காரணமாக, ஈரானிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 595 பேர் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர். தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வரக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும்...
மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்: அரசு பள்ளி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை
admin - 0
முழு நேரமாக பணியாற்றுவதால் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுப் பள்ளி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.லட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த...
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறிய கேட்டரிங் நிறுவனங்கள்
admin - 0
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால், சென்னையில் உள்ள பல்வேறு கேட்டரிங் நிறுவனங்கள் மீண்டும் விறகு அடுப்புக்கே மாறியுள்ளன.
போர் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால், சென்னை முழுவதும் உள்ள உணவு தயாரிப்பு மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
சென்னையில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் வழக்கம்போல் விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்களுக்கு...
எரிபொருள், காஸ் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெறும் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள், காஸ் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும்.
தட்டுப்பாட்டை காரணம் காட்டி எரிபொருள் விலையை ஏற்றி விற்கும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
பத்திரிகையாளர் சங்கத்தின் பிரநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு, வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தனர்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் குடும்ப ஓய்வூதியம் ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.7,500ஆகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடியிருக்க...










