“தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டும் தான் பலமான கட்சிகள். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று, அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார். சிவகாசியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலின்...
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நவம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளன.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 68,467, வாக்குச்சாவடி நிலை முகவர்கள் 2,11,445. அச்சடிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களின் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 582 (100...
"தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் நமக்குத்தான் ஒதுக்கி இருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நடக்காது. ராமதாஸை அங்கு உள்ளவர்கள் தவறாக வழிநடத்தி...
தேர்தல் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைக்க இருக்கிறார்.
ஆடு - மாடுகள் மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு என வித்தியாசம் காட்டி வரும் சீமான், தண்ணீரின் தேவை குறித்தும், எதிர்கால தண்ணீரின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும்...
தேர்தல் சமயத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் வேண்டாம் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் துணைப் பொதுச்செயலாளராக்கினார் ஸ்டாலின். ஆனால், பொன்முடிக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரான லட்சுமணன் எம்எல்ஏ-வுக்கும் இடையில் மீண்டும் உரசல் ஆரம்பித்துவிட்டது.
எஸ்ஐஆரைக் கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் விழுப்புரத்திலும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது லட்சுமணனின் மத்திய மாவட்ட எல்லைக்குள் வந்ததால் இதற்கான ஏற்பாடுகளை அவரே முன்னின்று கவனித்தார்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்துக்காக...
போலி வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுத்தான் கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயித்தாரா? – நிர்மலா சீதாராமன் கேள்வி
admin - 0
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் ஸ்டாலின் வெற்றி ஜெயித்தாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக கோவை கோட்ட அணி பிரிவுகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். மாநில தலைவர் நயினார்...
ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்களில் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும், கூட்டணி குறித்து முடிவை கட்சியின் தலைவர் விஜய்...
“வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே எஸ்ஐ ஆரை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: சரியான வாக்காளர் பட்டியலுடன் முறைகேடுகள் இல்லாத தேர்தலை நடத்தவும், அதற்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும்...
தடாகக் கட்சி தலைவர் மீது ‘டெல்லி மக்கள்’ அவ்வளவு திருப்தி இல்லாமல் இருக்கிறார்களாம். மாளிகைக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றபோதும் கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் தடாகக் கட்சியை பேசும்படியான இடத்தில் தடபுடலாய் வைத்திருந் தாராம் ‘பிரதர் மவுன்ட்’ தலைவர்.
ஆனால், இப்போது மாளிகைக் கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்ட நிலையில் புதுத் தெம்போடு நிற்க வேண்டிய கட்சி, அதற்கு மாறாக பழைய தெம்பையும் இழந்து சுரத்தில்லாமல் இருக்கிறதாம். ஏன் இந்தத்...
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நிலையில், தேசியக் கட்சியான காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது கூட்டணிக் கட்சியினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய திமுக ஐடி...










