தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜாகிர் உசேன் நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை.
தனியார் செயலிகள் மூலம் வாகனங்களை இயக்கும் நிறுவனங்களை முறைப்படுத்த அக்ரிகேட்டர் சட்டம் அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
பல பள்ளிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை...
திருச்சி முகாமில் இருந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி திரும்பிய காமாட்சி அம்மன் கோயில் யானைகள்
admin - 0
திருச்சி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3 பெண் யானைகள், நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு சங்கர மடத்தின் நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டன. அந்த யானைகளுக்கு பூஜைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகள் சங்கர மடத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன. இவை கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவச்...
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முதல்வருக்கு பிப்.8-ம் தேதி நன்றி அறிவிப்பு விழா நடைபெறுகிறது.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வெ.சோமசுந்தரம், இரா.தாஸ், எஸ்.ஞானசேகரன் ஆகியோரின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) தமிழக முதல்வர் ஜன. 3-ம் தேதி அறிவித்தைத் தொடர்ந்து, சென்னை ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் பிப்.8-ம் தேதி...
கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்க சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு...
நாடுமுழுவதும் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் பிப்.15-ம் தேதி வரை நடக்கிறது.
இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ மனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர் சவுந்தரி கூறியதாவது: உலகம் முழுவம் 9 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (குளுக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 1.30 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விழியின் முன் பகுதியில் உள்ள அறையில் (ஏன்டீரியர் சேம்பர்) சுரக்கும்...
கச்சத்தீவு பகுதி மீதான பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று கச்சத்தீவுக்குச் சென்று இந்திய தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று காவிப் புலிப்படை கட்சி அறிவித்திருந்தது.
இதன்படி, கட்சித் தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் ஏராளமானோர் தஞ்சாவூரிலிருந்து ராமேசுவரத்துக்கு நேற்று வந்தனர்.
அவர்கள் நேற்று மதியம் ராமநாத சுவாமி கோயிலி்ல் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரைக்குச் சென்றபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர்,...
சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.எம்.சுப்ரமணியம், அனிதா சுமந்த் உள்ளிட்ட...
வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம் 3-ல் 800 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி செய்ய முடியும்.
இந்த அனல் மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து அனல் மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வடசென்னை...
மொரீஷியஸில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூச விழாவில் தமிழ் பக்திப் பாடல்களை பாட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்பியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். இதன் மக்கள்தொகை 12 லட்சம். இந்திய வம்சாவளியினர் இங்கு அதிகமாக உள்ளனர். குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
அங்கு கரும்புத் தோட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் வலுவான அடித்தளமிட்ட இவர்கள், இந்து சமய அடையாளத்துடன் தைப்பூச விழாக்களையும்,...
மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழ் மண்ணின் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இதற்காக தமிழர் மரபும்-நாகரிகமும், தமிழகத்தில் சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆளுமைகளைக் கொண்டு அமர்வுகளை நடத்தலாம். அதில் மொழிப்பற்றாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள் உள்ளிட்டோரை கொண்டு மாபெரும்...
