“சொந்தக் கட்சிக்காரங்களே சூனியம் வெச்சுட்டாங்க” என்ற புலம்பலுடன் அண்மையில் மணாளனுடன் ஜோடியாக வந்து இலைக் கட்சியில் இடம்பிடித்த ‘கிரி’ மாவட்டத்தின் முன்னாள் சூரியக் கட்சி சேர்மன், மக்களவைத் தேர்தலிலேயே சீட்டுக்கு மோதினாராம். அது நடக்காததால் இம்முறை ‘கிரி’ தொகுதியில் சீட் கேட்கும் திட்டத்தில் இருந்தாராம்.
ஆனால், இவருக்கும் சூரியக் கட்சியின் மாவட்ட முதன்மைப் புள்ளிக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தமாம். வருங்கால அமைச்சர் கனவில் இருக்கும் மாவட்டப் புள்ளிக்கு ‘சேர்மனின்’...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை ஒட்டி வரும் டிச.24-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தவுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு டிச.24-ம் தேதி அமரர் ஆனார்.
அவரது 38-வது ஆண்டு நினைவு நாளான வரும் டிச.24-ம் தேதி காலை...
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 175 தொகுதிகளில் சுற்றுப் பயணம் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
திருப்போரூர் அடுத்த மாமல்லபுரம் சாலையில் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மேடை...
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.690 கோடிக்கு விற்பனை: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
admin - 0
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக் குழுவினரின் விற்பனை கண்காட்சியை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடப்பாண்டில் சுயஉதவிக் குழுவினரின் பொருட்கள் ரூ.690 கோடிக்கு விற்பனையானதாக தெரிவித்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பண்டிகைக் காலங்களில் சிறப்பு விற்பனை கண்காட்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.
அதன்படி சென்னை வள்ளுவர்...
பொங்கலுக்குப் பிறகு தேமுதிக-வில் விருப்பமனு பெறப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மக்கள் மீட்பு மாநாடு 2.O வரும் ஜன.9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு பணிகள் குறித்து நேற்று கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தேமுதிக-வின் மாநாடு, விஜயகாந்த் குருபூஜை, அதன் பின்னர் பொங்கல் என அனைத்தும்...
திருப்பரங்குன்றம் தீபத் தூண் யாருக்கு சொந்தம்? – உயர் நீதிமன்றத்தில் வக்பு வாரியம் தரப்பில் வாதம்
admin - 0
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சிக்கந்தர் தர்காவுக்கு சொந்தமானது என்று வக்பு வாரிய வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வாதாடினார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உட்பட 20 மேல்முறையீட்டு மனுக்களும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக 6 மேல்முறையீடு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான...
பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்
admin - 0
தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச்...
என்டிஏ ஆட்சிக்கு வந்தால் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி
admin - 0
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தபிறகு மாநிலம் முழுவதும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச உண்டு உறைவிட வசதியுடன் தரமான கல்வியை நல்கும் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தனது அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழகத்தில் வரவிடாமல் தடுக்கும் திமுக அரசைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளது...
தமிழக அரசு உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தி வருகிறது: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெருமிதம்
admin - 0
தமிழக அரசு உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தி வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது: நானோ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள்தான், வருங்கால தொழில்துறையில் முன்னிலை வகிக்கும். திறன்மிகு பேட்டரிகள், சூரிய ஒளி தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறை ஹைட்ரஜன் அமைப்புகளில் நானோ...
தகுதியற்ற ஆட்சியாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்வதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக குறிஞ்சிப்பாடியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாவது: ஊழலுடன் போதை பொருட்களும் அதிக அளவு புழங்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. குற்றப் பணத்திலும் ஊழல் பணத்திலும் சொத்து சேர்ப்பவர்கள் பாவிகள். ஸ்டாலின் அரசு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு ஆபத்து. வள்ளலார் பக்தர்கள் விருப்பத்துக்கு எதிராக, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை...
