Google search engine
கிழக்கு கடற்கரைச் சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையில்...
கள உதவியாளராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய கேங்மேன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ளமின்வாரிய தலைமை அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள், ``தமிழ்நாடு மின்வாரியத்தில் 63 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரியம், அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக களஉதவியாளராக மாற்ற வேண்டும். குடும்பத்தைப்...
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக அரசின் அழைப்பை ஏற்றே ராஜ்நாத்சிங் பங்கேற்றார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். தென்னிந்திய அளவிலான செய்தி ஒளிபரப்புத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை அகில இந்திய வானொலி மையத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த 8 மாதங்களுக்கு முன் டிடி தமிழ் சேனல் மேம்படுத்தப்பட்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது....
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ள நீர் அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் ஆலயம்உள்ளது. அங்கு தை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலைகளும், அதன்நடுவே பாயும் பஞ்சலிங்க அருவியும்...
முதல்வர் மருந்தகத்துக்கும், அம்மா மருந்தகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த மருத்துவமனை ஒரு நூற்றாண்டை கடந்த பழமைவாய்ந்த மருத்துவமனையாகும். பழமைவாய்ந்த இந்த மருத்துவமனை கடந்த காலங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த மருத்துவமனையில் ரூ.26.50 கோடி மதிப்பீட்டில்...
ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்து செயல்பட்டதால்தான் அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கருணாநிதி உயர்ந்து நிற்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார். இவ்விழாவுக்கு தலைமையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக...
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 23 வயது இளம் பெண் ஒருவர், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு...
முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்- சாட்டை துரைமுருகன் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியானது. அதில், கட்சி நிர்வாகிகளை சீமான் விமர்சித்துப் பேசியது சர்ச்சையானது. தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திருச்சி எஸ்.பி. வருண்குமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மறைமுகமாக விமர்சித்துப் பேசினர்.இதற்கு...
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா விண்கலம் டிசம்பரில் விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர்,ஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியதாவது:எஸ்எஸ்எல்வி ராக்கெட் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இது இனிமேல் வர்த்தக ரீதியான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த ராக்கெட் தொழில்நுட்பம் பரிமாற்றம் குறித்து பல நிறுவனங்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் தகுதியான...
மின்கட்டண உயர்வால், மின்வாரியத்துக்கு மானியச் செலவு அதிகரித்துள்ளதால், அதை ஈடுசெய்ய கூடுதலாக ரூ.519 கோடியை வழங்குமாறு தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.இதன்படி, இந்த நிதியாண்டுக்கு ரூ.15,332 கோடி மானியம் வழங்க அரசுக்கு மின்சார...