Google search engine
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்கு செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும்இந்நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்து மத்திய...
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கும் போது மதுக்கடைகளை மூடுவதில்என்ன தயக்கம். இக்கொள்கையில் உடன்பாடு உள்ள சாதியவாத, மதவாத சக்திகளைத் தவிர அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் விசிகவின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில்...
துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம், பொறியியல், சட்டப் படிப்பு மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை...
அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான விவகாரத்தில் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் இன்று (செப்.13) தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தன்னம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனுடன் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி...
ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத்தேர்வு நாளை (செப்.14 சனிக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 2,327 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர்,ஃபாரஸ்டர் உள்ளிட்ட குரூப்-2பதவிகளில் 507 காலியிடங்களையும், அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை...
விக்கிரவாண்டியில் செப்.23-ம் தேதி நடப்பதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம்22-ம் தேதி கட்சியின் கொடி,பாடலை அறிமுகம் செய்தார். கட்சியின் கொள்கைகள் மற்றும்கொடிக்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில், கட்சியின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதில்...
உடல்நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள், அவரது மறைவு முற்போக்கு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:ஆளுநர் ஆர்.என்.ரவி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
மகாராஷ்டிராவின் நவி மும்பை கன்சோலியில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் கஸ்டம்ஸ் அதிகாரி என கூறி, நீங்கள் துபாய்க்கு அனுப்பிய பார்சலில் ஆட்சேபத்துக்குரிய போதைப் பொருட்கள் மற்றும் போலீஸ் சீருடைகள் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அந்தேரி பகுதி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்ய இருப்பதாகவும், பணமோசடி மற்றும் தீவிரவாதிகளுடன்...
பாரதியார் நினைவு நாள் நேற்றுஅனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்குள்ள பாரதியார்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியார் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி...
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப் பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப் பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரிக்கிறது. இத்தகைய...