சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு கைது செய்தனர்.
பின்னர் அவர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில்...
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 6 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
admin - 0
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் 6 புதிய திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணி என மொத்தம் 6 புதிய திட்டப் பணிகளுக்கு...
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3,268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, இன்று (அக்.30) மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதாவது, புதன்கிழமை காலை 5...
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வதால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக இன்று கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காத பலர், விமானங்களில் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
அலைமோதும் பயணிகள்: இதனால் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி,...
“போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீபாவளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது” என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரின் சீரிய தலைமையில் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார்கள். 10 ஆண்டு...
ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இயக்குநர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த ஜூன் 26-ல் ஜாபர் சாதிக்கை...
தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவில் ஆண்களுக்கு 12 படுக்கைகள், பெண்களுக்கு 8 படுக்கைகள், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் என மொத்தம் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு சிகிச்சை வார்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பாதுகாப்பாகப் பட்டாசுகள்...
தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது பொது போக்குவரத்தை தனியார் மயமாக்கும்: கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
admin - 0
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் நலன் கருதி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும் என மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. ஆனால், இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்துக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முன்வந்துள்ள...
தீபாவளி பண்டிகை நெரிசலை குறைக்க தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை
admin - 0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (அக்.31) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக, வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பாக முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.
இதையடுத்து, 15-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் குறிப்பிட்ட...










