Google search engine
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விவசாயத்தை பாதுகாக்க, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடன் முறையாக, முழுமையாக வழங்கப்பட வில்லை என விவசாயிகள்...
சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு புரளியை கிளப்பும் வகையில் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்தவாறு மர்ம நபர்கள் இ-மெயில்கள் மூலம் இவ்வாறு மிரட்டி வருகின்றனர். அதன்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல்...
சென்னை அடுத்த கவுரிவாக்கத்தில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அடுத்த கவுரிவாக்கத்தில் தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை (புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி) அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ...
ஆதர்ஷ் சம்ஸ்கிருத மகாவித்யா லயா திட்டத்தின்கீழ் தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக குழுவினர் மதுராந்தகம் அஹோபில மடம் சம்ஸ்கிருத கல்லூரியில் ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சந்நிதி தெருவில்  அஹோபில மடத்தின் ஆதர்ஷ் சம்ஸ்கிருதகல்லூரி இயங்கி வருகிறது.  மாலோலன் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இக்கல்லூரியில் சிரோமணி (எம்ஏ), மத்யமாசிரோமணி (பிஏ), பிராக் சிரோமணி படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆதர்ஷ் சம்ஸ்கிருத மகாவித்யாலயா திட்டத்தின்கீழ்...
‘செயற்கை நுண்ணறிவு’ (ஏஐ) பயன்பாடு வெளிப்படை, உண்மைத் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நேற்று தொடங்கியது. நாளை (நவ.8) வரை நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று பங்கேற்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக ‘நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு -...
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயங்களை விரைவாககுணப்படுத்த உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை அளிக்கப் படுகிறது. நோயாளிகள் டிவி பார்த்து கொண்டே சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் தீ விபத்தால் ஏற்படும் காயங்களை குணப்படுத்த சிறப்பு தீக்காய பிரிவு மற்றும் அதிநவீன உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. நீண்ட நாட்களாக குணமாகாமல் இருக்கும் காயங்களை சரி செய்ய நோயாளிகளுக்கு உயர் அழுத்த...
மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு வரும் 13-ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளது. இது குறித்து இந்தக் குழுவின் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்தாஸ் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு,...
மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள சிறிய மருத்துவமனைகளில் 24 மணி நேர சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர். இதுதொடர்பாக சென்னையில் அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எங்களது நீண்டநாள் கோரிக்கையான அரசாணை 354-ஐ மறுஆய்வு செய்து ஊதியம் மற்றும் பணி உயர்வு வழங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசாணை 293-ஐ மாற்றம்...
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், தடா - சூலூர்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு நவ. 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு நவ. 7, 9, 12 ஆகிய...
அணைகள் மற்றும் ஏரிகளில் மதகுகள் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நீர்வளத் துறையின் அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது அப்போது, அமைச்சர் பேசும்போது, “தமிழ்நாடு முழுவதும் நீர்வளத் துறையின்...