ரயில்வேயின் யுடிஎஸ் செயலியில் கட்டணம் செலுத்தியும் டிக்கெட் வரவில்லை: அபராத தொகை செலுத்தும் பயணிகள்
admin - 0
யுடிஎஸ் செயலி மூலமாக டிக்கெட்பதிவு செய்வோரிடம் கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டாலும், மொபைல் செயலியில் டிக்கெட் எடுக்கவில்லை என காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பயணிகள் டிக்கெட் பரிசோதகர்களிடம் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுக்காக கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யுடிஎஸ்மொபைல் செயலி செயல்பாட்டில் உள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முன்பதிவில்லாத டிக்கெட்டை இந்த செயலி வாயிலாக எடுத்து,...
லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காப்பீட்டு நிறுவன பெண் அதிகாரி உயிரிழப்பு: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி படுகாயம்
admin - 0
லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காப்பீட்டு நிறுவன பெண் அதிகாரி உயிரிழந்துள்ளார். பின்னால், அமர்ந்து பயணித்த அவரது தோழியான ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி காயமடைந்தார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சொர்ண லட்சுமி (40). காப்பீடு நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக இருந்தார். அவரது சிறுவயது தோழி பிரபா (42). இவர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவியாவார். இந்நிலையில் மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு...
தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம், கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 16 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து 2024-25 கல்வியாண்டில் எழுதப்...
எம்பிபிஎஸ் மாணவர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற 23-ம் தேதி வரை அவகாசம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
admin - 0
எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசியமருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி...
வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத 3 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்களில் அதை உருவாக்குவதற்கான பணிகளில் சென்னைக் குடிநீர் வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
சென்னையில் 1993-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது மழைநீரை சேமிக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசு கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், வணிகக் கட்டிடங்கள், தொழில்துறை கட்டிடங்கள் என அனைத்துக் கட்டிடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு...
எல்லை தாண்டி வந்ததாக குற்றம்சாட்டி, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெயராஜ், ராஜா, கீதன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர்...
அதிமுக களஆய்வுக் குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக களஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.
கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள கட்டமைப்புகளின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக...
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்
admin - 0
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும். இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ் தனி நிதியம் ஏற்படுத்தி, அதற்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடி மதிப்பிலான நலத்திட்ட...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு...
கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக நெல்லையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தாமிரபரணியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், நீதிமன்ற உத்தரவை மீறி, தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, நதியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கை குறித்து...










