சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், “எனது வார்டில் நான் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றிவிட்டேன். எதிர்க்கட்சி வார்டு என்றும் பாராமல், திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி” என்றார்.
சென்னையில் 22,875 மாடுகள் உரிமையாளர்களால்...
அதிகாரத்தில் பங்கு கேட்டு அதிகாரக் கட்சிக்கே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கட்சி தரப்பில் இம்முறை 30 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறார்களாம். இது சாத்தியமாகுமா என்று தெரியாத நிலையில், இன்னொரு கட்டப் பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
ஆட்சியில் பங்கு கேட்கும் கட்சி கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் 8 தொகுதிகளை இந்த முறை அந்தக் கட்சிக்கு தரமுடியாது என தடாலடியாகச் சொல்லிவிட்ட அதிகாரக் கட்சி, “8 தொகுதிகளையும் மீண்டும் உங்களுக்குக் கொடுத்தால் தேற...
வங்கதேச மீனவர்கள் மீது காட்டுவதைப் போன்று இந்திய மீனவர்கள் மீதும் பிரதமர் இரக்கம் காட்ட வலியுறுத்தல்
admin - 0
பிரதமர் மோடி வங்கதேச மீனவர்கள் மீது காட்டும் இரக்கத்தை இந்திய மீனவர்களின் மீதும் காட்ட வேண்டும் என்று, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களின் மீன் பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையில் அடைத்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்துடன், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதை...
சோழ, பாண்டிய மன்னர்களை திருமாவளவன் இழிவுபடுத்துவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் அனைத்துத் தவறுகளுக்கும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளையே நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், தற்போது 10 நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று மாபெரும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை அவதூறாகப் பேசியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மொழியானது...
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நிறுவனர் கஸ்தூரி ரங்க ஐயங்கார் உள்ளிட்ட மறைந்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி
admin - 0
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மறைந்த ‘தி இந்து’ கஸ்தூரி ரங்க ஐயங்கார், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ராம்நாத் கோயங்கா, ‘தினமலர்’ ராமசுப்பையர், திருவிக, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது படங்களுக்கு தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில்மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னை எழும்பூரில்...
கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர உண்ணாவிரதம்: அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு
admin - 0
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு மருத்துவர்களுக்குக் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ன்படி, ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.3,000 ஊக்கத்தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்...
சிவகாசி சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்களி டையே பதற்றம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சில நேரங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படும்போது, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம்.
ஆனால் நேற்று எந்த பட்டாசு ஆலையிலும் வெடிவிபத்து ஏற்படவில்லை. இந்நிலையில்,...
திருப்போரூர் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து மறியல்
admin - 0
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கடசியினர் மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனி நபர்கள் இடத்தில் இருப்பதாகவும், அவற்றை மீட்டு கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத் என்பவர் கடந்த...
பிஹார் தொழிலாளி, அவரது மனைவி, 2 வயது ஆண் குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை தரமணியில் பிஹார் இளைஞர், அவரது மனைவி, 2 வயது குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, அவரது நண்பர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள்...
கம்பரின் படைப்புகள் மீதான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டியது நமது கடமை: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்
admin - 0
‘கம்பரின் படைப்புகள் மீதான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவன் சார்பில் ‘கல்விக் கூடங்களில் கம்பர்’ விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: கம்ப ராமாயணம் உட்பட இதிகாசங்கள் நமது கலாச்சாரம், பண்பாடு...
