சுதா சேஷய்யன் உள்ளிட்ட 5 பேருக்கு ‘ராஜஸ்தானி தமிழ் சேவா’ விருதுகள்: நீதிபதி மகாதேவன் வழங்கினார்
admin - 0
தமிழகத்தின் சமூக, கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தங்களது தன்னலமற்ற சேவையால் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள், நிறுவனங்களை கவுரவித்து ‘ராஜஸ்தானி - தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன், மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத் தலைவர் சுவாமி நாதன் ஐசன்ஹோவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தலைமை...
கடுமையான பனிமூட்டம் நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 40 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை.
இதனால் மும்பை, கோலாலம்பூர், புனே, பெங்களூரு, ஹைதராபாத், துபாயிலிருந்து வந்த 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தன.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானங்களை பெங்களூரு, கோவை,...
கும்மிடிப்பூண்டிக்கு சென்னையிலிருந்து நேற்று காலை 7.10 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் எண்ணூர் - அத்திப்பட்டு இடையே சென்று கொண்டிருந்தபோது, உயர் அழுத்த மின்பாதையில் இருந்து மின்சாரத்தை பெறும் மடக்கு சாதனம் பழுதடைந்தது.
இதனால் ரயில் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அதையடுத்து அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து, பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால்,...
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, பிப்.8-ம் தேதி (நேற்று) முதல் 18-ம் தேதி வரை அங்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நடைமேடை மாற்றம்: புறநகர் மின்சார ரயில்கள் மேற்கண்ட நாட்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 10, 11-வது நடைமேடைகளுக்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் வந்து செல்லும்.
செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து...
சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் கன்டெய்னர் லாரி டிரெய்லர் கேபின் விழுந்த விபத்தில் ஓட்டுநர் சடலமாக மீட்பு
admin - 0
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் முத்துமாரியப்பன் (36). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னரை இறக்கிவிட்டு அடுத்த கன்டெய்னரை ஏற்றுவதற்காக சென்னை துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வந்தார்.
அந்தமானுக்கு சரக்கு ஏற்றும் இடத்தில் டிரெய்லர் லாரியை ஓட்டிச் சென்றபோது திடீரென முன்பக்கம் கேபின் (டிரைவர் கேபின்) உடைந்து அதனுடன் முத்துமாரியப்பன் கடலில் தலைக்குப்புற விழுந்தார். இதைக் கண்டு...
கலைவாணர் அரங்கம் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பித்து நிறுவப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டில் பிறந்தார்.
சுடலை முத்துப் பிள்ளைகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும். தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடக தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்ற புகழுடன் விளங்கியவர். அண்ணா,...
கோயில்கள் பராமரிப்புக்கு ரூ.36 கோடி அரசு மானியம்: 20 பேருக்கு ‘கைவினைப் பொக்கிஷம்’, ‘பூம்புகார்’ விருதுகள்
admin - 0
அறநிலையத் துறை சார்பில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவுக்கான அரசு மானியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். அந்த வகையில், உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.18 கோடிக்கான காசோலையை சுசீந்திரம் -
கன்னியாகுமரி தேவஸ்தான கோயில்கள் இணை ஆணையர் ஜான்சிராணியிடமும், அரசு மானியம் ரூ.10 கோடிக்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட கோயில்களின் தக்கார் ரஞ்சிதாவிடமும், அரசு மானியம்...
தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து தமிழகம் முழுவதும் பிப்.9-ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் விபத்து இடத்துக்கு வருவதற்கு முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான பயிற்சியை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வழங்க உள்ளது.
இந்த பயிற்சி தமிழகம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு நிலையங்களிலும், பள்ளி, அடுக்குமாடி...
ரூ.13 கோடி செலவில் கோவளம் உள்ளிட்ட 11 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
admin - 0
ரூ.13 கோடியே 62 லட்சம் செலவில் கோவளம் உள்ளிட்ட 11 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
கோவளம் ஊராட்சி மற்றும் 10 ஊரகக் குடியிருப்புபகுதிகளுக்கு ரூ.13 கோடியே 62 லட்சம் மதிப்பில் உயிர் நீர் இயக்கம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் பங்களிப்புடன் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதற்காக புதுப்பாக்கம் கிராமத்தில் 5 திறந்தவெளி...
கேரளாவில் தந்தையின் நிதி நிறுவன மோசடி விவகாரம்: தாம்பரத்தில் மாணவி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
admin - 0
கேரளாவில் தந்தையின் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், தாம்பரத்தில் தங்கியுள்ள அவரது மகளான கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
கேரளா மாநிலத்தில், நெடும்பரம்பில் கிரெடிட் சிண்டி கேட் என்ற நிதி நிறுவனம், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்குவதாக விளம்பரம் செய்து, ஏராளமான முதலீட்டாளர்களிடம் பணம் திரட்டியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், வட்டித் தொகையையும், முதலீடு செய்த தொகையையும் திருப்பி வழங்காமல், பொதுமக்களை ஏமாற்றிய தாக...
