Google search engine
‘பெல் பிரதர்ஸ்’ என பத்திரிகைகள் வேடிக்கையாகச் சொல்லும் அளவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் பி.தங்கமணியும் இணை பிரியாமல் இருந்தவர்கள். என்ன காரணமோ தெரியவில்லை, அண்மைக்காலமாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்கும் போது கூட தங்கமணி தலையை பார்க்கமுடிவதில்லை. என்​ன​தான் ஆச்சு தங்க​மணிக்​கு? பாஜக-வுடன் கூட்​டணி இல்​லவே இல்லை என்று பழனி​சாமி சொல்லி வந்​தா​லும், “நமக்கு பாது​காப்பே பாஜக தான்....
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்காவிட்டால், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, ‘‘சாதியை ஊக்குவிக்கும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்ய முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்....
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? என்பது குறித்து அமித் ஷா முடிவெடுப்பார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நயினார் நாகேந்திரன் நேற்று தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். பாஜக தொண்டர்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கமலாலயத்தில் கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு, கட்சி நிர்வாகிகள்,...
அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத்துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் அரசு துறைகளின் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்மொழியை பயன்படுத்தவும், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதேபோல், சிற்றாணை குறிப்புகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். துறை...
தமிழகத்தில் 1 லட்சத்து 55,992 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னை அண்ணா நகரில் கூடுதலாக ஒரு ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பதிலளித்து பேசும்போது, டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வு...
தமிழகத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஜுன் மாதம் முதல் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் பி.கீதா ஜீவன் பதிலளித்து பேசியதாவது: காலை உணவுத் திட்டம் 2022 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 34,987...
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் நேற்று தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,...
மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி அரசு என்று கூறவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திமுக கூட்டணியை வீழ்த்தும் நோக்கில், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஏப்.10-ம் தேதி...
பொதுமக்களின் வசதிக்காக பெயர் திருத்தம், பெயர் மாற்றத்துக்கான இணையவழி சேவை வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும். தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: பொதுமக்களிடம் இருந்து அரசிதழில் பெயர்...
தரமான கல்​வி​யால் நாம் நாட்டை வழி நடத்தி கொண்​டிருக்​கிறோம் என்று துணைவேந்​தர்​கள், பதி​வாளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டாலின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்னை தலைமை செயல​கத்​தில் நேற்று மாலை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில், பல்​கலைக்​கழக துணைவேந்​தர்​கள், பதி​வாளர்​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில், அமைச்​சர்​கள், எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், எஸ்​.ரகுப​தி, மு.பெ.​சாமி​நாதன், அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், மா.சுப்​பிரமணி​யன், கோவி.செழியன், தலைமை செய​லா​ளர் நா.​முரு​கானந்​தம், உயர்​கல்​வித்​துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இக்​கூட்​டத்​தில் தொடக்​கத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின்...