Google search engine
நடிகர் விஜய்யுடன் யாரெல்லாம் கூட்டணி சேரப் போகிறார்கள்... அல்லது அவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பதே புரியாத புதிராக இருக்கையில், அவரை மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடச் சொல்லி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மதுரை மாவட்​டத்​தில் மொத்​தம் 10 சட்​டமன்ற தொகு​தி​கள். இருந்​தா​லும் இதில் மதுரை மேற்கு மட்​டும் ஸ்பெஷல். காரணம், இது எம்​ஜிஆர் போட்​டி​யிட்டு வென்ற தொகு​தி. எம்​ஜிஆர் வென்ற பழைய மேற்கு...
“50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறும் வித்தையை தெரிந்து வைத்துள்ள மருத்துவர் அய்யா, மகனையும் கட்சியையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையை படிக்க மறந்துவிட்டாரே” - பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் அதிகார யுத்தத்தை அரசியல் வட்டாரத்தில் இப்படித்தான் பேசுகிறார்கள்.​பாமக பொதுக்​குழு​வில், தனது மகள் வழி பேரனை பாமக இளைஞர் சங்க தலை​வ​ராக ராம​தாஸ் அறி​வித்​த​தில் வெளிப்​படை​யாக வெடித்த அப்பா - பிள்​ளைக்​கான அதி​கார யுத்​தம்...
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். நடப்பு ஆண்டு கேரளாவில் 8 நாள் முன்னதாக கடந்த 24-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை...
மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். இதற்கு ஒற்றை வரியில் பதில் அளிக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் எதற்காக டெல்லி சென்றார் என்பதை அவர்தான் கூறவேண்டும். இதனால் தமிழக மக்கள் பயன் அடைந்தால் வரவேற்போம். அதேபோல்,...
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பழனிசாமி கையெழுத்திட்ட படிவங்களை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் வா.புகழேந்தி, சூரியமூர்த்தி ஆகியோர் மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 இடங்களுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே பழனிசாமி பொதுச்செயலாளரானது, அவர் பல்வேறு தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் படிவங்களில் கையெழுத்திட்டு...
கரோனா பரவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறினார். ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை திடலில் முன்னோட்ட யோகா தின உற்சவம் நேற்று நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் யோகா பயிற்சியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்...
 ஜூன் 22-ல் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரியை அமைத்து, 5 லட்சம் பக்தர்களைத் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை சுற்றுச் சாலையில் உள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் வரும் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த...
மாநிலங்களவை தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில் தொடர்புடைய, துணை முதல்வரின் நண்பர்களான ரிதீஸ், ஆகாஷ் ஆகியோரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. அவர்கள் ஏன்...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு `உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில், உலக எரிசக்தி தலைவர்கள் மாநாடு புதுடெல்லியில் உள்ள ரோஸேட் ஹவுஸ் ஏரோசிட்டியில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம் என்ற விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்...
நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்ததால் ஊட்டி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இடைவிடாது மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தன. தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் மரங்களை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். மரங்கள் மீது மின்கம்பங்கள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பார்சன்ஸ் வேலி பகுதியில் மரங்கள்...