மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் ‘தருண் பாரத்’ என்ற மராத்தி நாளிதழின் நூற்​றாண்டு விழா​வில் பங்​கேற்ற ஆர்​எஸ்​எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசி​ய​தாவது: சமூக ஊடகங்​கள் மக்​களால் பெரு​மள​வில் பயன்படுத்தப்பட்டாலும், அவை நல்ல நோக்​கங்​களு​காகப் பயன்படுத்​தப்பட வேண்டும். மீம்​ஸ்​கள் மற்​றும் ரீல்​ஸ்​கள் ஏற்கெனவே புழக்​கத்​தில் உள்​ளன. ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் தகவல் தொடர்​புத் துறை மூலம் சில உள்​ளடக்​கங்​கள் பரப்பப்படுகின்​றன. மேலும் நமது தன்​னார்​வலர்​களும் சமூக ஊடகங்​களைப் பயன்​படுத்​துகின்​றனர். மேலும் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பணி​கள்...
பெங்​களூரு குடிநீர் வடி​கால் வாரிய வழக்கை விசாரித்த உச்​ச நீ​தி​மன்ற 7 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல்​ சாசன அமர்வு மருத்​து​வ​மனை​கள், கல்வி நிலை​யங்​கள், கிளப்​பு​கள், அரசின் நலத்​துறை​களில் பணிபுரி​யும் லட்​சக்​கணக்​கான தொழிலா​ளர்​களை தொழில் தகராறு சட்​டத்​தின் கீழ் கொண்டு வந்து தொழிற்​சாலை என்​ப​தற்​கான வரையறையை அளித்​தது. இதனிடையே இதை எதிர்த்து மத்​திய அரசும், குஜ​ராத், மத்​திய பிரதேசம், ஹரி​யாணா உள்​ளிட்ட மாநில அரசுகளும், பழனி அருள்​மிகு தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில்...
தொழில்​நுட்​பக் கோளாறு காரண​மாக அயர்லாந்​தின் ஷானன் நகரில் தவித்​துக் கொண்​டிருந்த ஏர் இந்​தி​யா​வின் சிறப்பு விமானம் வியாழக்​கிழமை அதிகாலை தலைநகர் டெல்​லியை வந்​தடைந்​தது. கடந்த திங்​கள்​கிழமை, நியூ​யார்க்​கி​லிருந்து டெல்லி நோக்கி வந்து கொண்​டிருந்த ஏர் இந்​தி​யா​வின் ‘ஏ350’ ரக விமானம் (AI102), திடீர் தொழில்​நுட்​பக் கோளாறு காரணமாக அயர்லாந்​தின் ஷானன் நகருக்​குத் திருப்பிவிடப்​பட்​டது. அங்கு விமானம் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்​து, அதிலிருந்த 220-க்​கும் மேற்​பட்ட பயணி​களும் ஊழியர்​களும் அங்​கேயே தவிக்கும் சூழல்...
பெண்களுக்கு எதிராக கடந்தாண்டில் 76,657 சைபர் குற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய சைபர் குற்றம் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார் கூறியதாவது: பெண்களுக்கு எதிராக கடந்த 2022ல் 62,224, 2023ல் 40,066, 2024ல் 48,335 மற்றும் 2025ல் 76,657 சைபர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தேசிய சைபர் குற்றப்...
ஆந்​தி​ரா​வில் பெண்​களை தொடர்ந்து மாற்றுத்திறனாளி​களுக்​கும் இலவச பேருந்து பயண திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்​தார். ஆந்​தி​ரா​வில் ‘சூப்​பர் சிக்​ஸ்’ திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என கடந்த 2024 தேர்​தலில் தெலுங்கு தேசம் கட்​சித் தலை​வர் சந்​திர​பாபு நாயுடு வாக்​குறுதி அளித்​தார். தேர்​தலுக்கு பின் ஆட்​சியை கைப்​பற்​றிய அவர், அத்​திட்​டத்தை படிப்​படி​யாக அமல்​படுத்தி வரு​கிறார். இதன்​படி மாதந்​தோறும் முதி​யோர்​களுக்கு தலா ரூ.4 ஆயிரம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு தலா ரூ.6...
பெங்​களூரு​வில் உள்ள பார​தி நகரை சேர்ந்த 55 வயதான ரமேஷ் (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது) வரு​மான வரித்துறை​யில் அதி​காரி​யாக கடந்த 30 ஆண்​டு​களாக பணியாற்றி வரு​கிறார். இவர் கடந்த மார்ச் 6-ம் தேதி பார​திநகர் காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரில் கூறிய​தாவது: கடந்த டிசம்​பரில் கிளி ஜோசி​யர் சேகர் (59) எனக்கு அறி​முக​மா​னார். எனது ஜாதகத்தை ஆராய்ந்த பின்​னர், கிளி ஜோசி​யம் பார்த்​தார். எனக்கு பணி இட மாற்​ற​மும், பதவி உயர்​வும்...
இ​மாச்​சலில் அரசு ஊழியர்​கள் ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணியவும் சமூக ஊடகத்​தில் அரசி​யல், மதக் கருத்​துகள் தெரிவிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இமாச்​சலில் கடந்த 2017ம் ஆண்​டு, ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்பட்ட அரசு ஊழியர்​களுக்​கான ஆடை நெறிமுறைகளை அனை​வரும் கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும் என மாநில அரசு அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக தலை​மைச் செய​லா​ளர் சஞ்​சய் குப்தா வெளியிட்​டுள்ள விரி​வான வழி​காட்​டு​தலின்​படி, அனைத்து அரசு ஊழியர்​களும் கண்​ணி​ய​மான, சுத்​த​மான மற்​றும் தொழில்​முறை சார்ந்த...
அமலாக்கத் துறை சோதனை நடைபெறும் போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேற்கு வங்​கத்​தில் ஐ-பேக் அலு​வல​கத்​தில் சமீபத்​தில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது. அப்​போது திடீரென அந்த அலுவலகத்​துக்​குள் முதல்​வர் மம்தா பானர்ஜி நுழைந்​தார். அங்கிருந்து ஆவணங்​கள், லேப் டாப் போன்​றவற்றை எடுத்​துக் கொண்டு சென்​றார். இது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இது தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட கோரி அமலாக்கத்...
கடைகளில் விற்கப்படும் முட்டைகளில் காலாவதி தேதியைக் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் பழைய முட்டைகளை விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் முட்டை வர்த்தகத்தின் மீதான தனது பிடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இறுக்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் பழைய முட்டைகளை புதியவை என்று கூறி விற்பது சாத்தியமில்லாத நிலை உருவாகியுள்ளது. உ.பி அரசின் புதிய...
தமிழக எம்​பிக்​கள் மாணிக்​கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்​பிக்​களின் சஸ்​பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்​ளது. பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்​வின்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, இந்​தி​யா, சீனா எல்​லைப் பிரச்​சினை குறித்து பேச முயன்​றார். அப்​போது அவருக்கு அனுமதி மறுக்​கப்​பட்​டது. இந்த விவ​காரம் தொடர்​பாக கடந்த பிப்ர​வரி 3ம் தேதி, மக்​கள​வைத் தலை​வரின் இருக்​கையை முற்றுகை​யிட்டு எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கோஷமிட்​டனர். அப்போது அவர்​கள் காகிதங்​களை...