Google search engine
மேற்கு வங்க மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி உள்ளிட்​டோர் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த உச்​ச நீதிமன்றம், மேற்கு வங்​கத்​தில் எஸ்​ஐஆர் வாக்​காளர் பட்​டியலில் முரண்​பாடு​கள் சார்ந்த கோரிக்​கை, ஆட்​சேபனை மனுக்​களை பரிசீலிக்க மாவட்ட நீதி​சார் அலு​வலர்​களை நியமித்து கடந்த 20ம் தேதி உத்​தர​விட்​டது. மேற்கு வங்க அரசுக்​கும் தேர்​தல் ஆணை​யத்​துக்கும் இடையே ஏற்பட்ட நம்​பிக்​கையற்ற நிலை​யில் இந்த ஏற்​பாட்டை செய்துள்ளதாக தெளிவுபடுத்​தி​யது. கூடு​தலாக ஜார்க்​கண்ட், ஒடிசா நீதி​சார் அலு​வலர்​களை...
டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப்புக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ‘பாரத் மண்டபத்தில் தேசிய அவமானம்' என்ற தலைப்பில் முன்னாள் நீதிபதிகள், ஐபிஎஸ், ராணுவ அதிகாரிகள் உட்பட 277 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இளைஞர் காங்கிரஸார் நடத்திய சட்டையில்லாத போராட்டம் நாட்டின் மாண்புக்கு செய்யப்பட்ட துரோகம். அதுவும்...
உத்​த​ராகண்​டின் ஜோதிஷ்வர் மடத்​தின் சங்கராச்சாரி​யா​ராக இருப்​பவர் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்த். பிர​யாக்​ ராஜ் மகரமேளா புனித நீராடலின் ​போது அவரது ஆதரவாளர்​கள் மற்​றும் உ.பி. போலீ​ஸார் இடையே மோதல் ஏற்பட்​டது. இதில் அவரது ஆதர​வாளர் படு​காயமடையக் காரண​மான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​திடம் வலி​யுறுத்​தி​னார். பலன் இல்​லாத நிலை​யில் மகரமேளாவை புறக்​கணிப்​ப​தாகக் கூறி அங்​கிருந்து வெளியேறினார். இந்​நிலை​யில், மகரமேளா​வில் தனது முகாமில் சீடர்​களாக இருந்த சிறு​வர்​களில் மூவரை...
திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றம்​சாட்​டி​னார். ஆந்​திர பேர​வை​யில் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் நேற்று காலை திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் கடந்த ஜெகன் ​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சி​யின்​ போது நெய்​யில் கலப்​படம் என்று தெரிந்தே வாங்​கிய​தாக தீவிர குற்றச்சாட்​டு​கள் முன் வைக்​கப்​பட்​டன. இதன் மீது...
ஆந்திர மாநிலம் ராஜ​முந்​திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்​காரரிடம் பால் வாங்​கிய பலருக்கு வாந்​தி, வயிற்​றுப்​போக்​கு, மயக்​கம் ஏற்​பட்டு அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்​சைக்​காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் தற்​போது தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்ளது. இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து பால்காரரை கைது...
குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் மூதறிஞர் ராஜாஜியின் மார்​பளவு சிலையை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று திறந்து வைத்​தார். சுதந்​திர இந்​தி​யா​வின் முதல் மற்​றும் ஒரே கவர்​னர் ஜெனரலான ஸ்ரீ சக்​ர​வர்த்தி ராஜகோ​பாலாச்​சா​ரி​யாரை கவுரவிக்​கும் வகையில் குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் ராஜாஜி விழா நேற்று தொடங்​கியது. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே அசோக மண்​டபம் அமைந்துள்ளது. இதற்கு அரு​கில் உள்ள பிரம்​மாண்ட திறந்த படிக்கட்​டில், எட்​வின்...
பஞ்​சாப் மாநிலம், அமிர்​தசரஸில் சீக்கியர்களின் பொற்​கோ​யில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் தின​மும் சுமார் 1 லட்​சம் பேர் தரிசனம் செய்​கின்​றனர். இங்கு மத நம்​பிக்கை கடுமை​யாக பின்​பற்​றப்​படு​கிறது. இந்நிலையில், பொற்கோ​யிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை அறிந்து வந்து அறிக்கை தர ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு நாயுடு ஒரு குழு அமைத்து உத்​தர​விட்​டார். அந்த அறிக்கையின் அடிப்படையில் திரு​மலை​யிலும் இந்​துக்​கள் அல்லாதவர்​கள் ஏழுமலையானை தரிசிக்க புதிய சட்​டதிட்டங்கள் தீவிர​மாக அமல் படுத்​தப்​பட உள்​ளன.
ஜம்​மு​வின் கீஷ்த்​வார் பகு​தி​யில் நேற்று முன்​தினம், மத்​தி​யப் பாது​காப்​புப் படை​யினர் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது அவர்​களு​டன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவா​தி​களின் இருப்​பிடத்தை நோக்கி குரைத்​துள்​ளது. இதையடுத்​து, டைசனை தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யால் சுட்டுள்ளனர். காலில் குண்டு பட்டு ரத்​தம் கொட்​டிய​போதும் டைசன் தொடர்ந்து குரைத்​துள்​ளது. இதையடுத்து பாதுகாப்புப்படை​யினர் தொடங்​கிய நடவடிக்​கை​யில் 3 தீவிரவாதி​களும் சுட்டு வீழ்த்​தப்​பட்​டனர். தீவிர​வா​தி​களின் மறை​விடத்​தைக் கண்​டு​பிடித்த ஜெர்​மன் ஷெப்பர்ட் நாயான டைசன், இந்த...
மத்​திய உள்​துறை சார்​பில் தேசிய தீவிர​வாத எதிர்ப்பு கொள்கை வெளி​யிடப்​பட்டு உள்​ளது. மத்​திய உள்​துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சில அண்டை நாடு​கள் தீவிர​வாதத்தை நாட்​டின் கொள்​கை​யாக கடைப்​பிடித்து வரு​கின்​றன. இதனால் இந்​தியா பாதிக்கப்படுகிறது. எனினும் தீவிர​வாதத்​துக்கு எதி​ராக மத்​திய அரசு உறுதியுடன் செயல்​பட்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக பிரஹார் (PRAHAAR) என்ற தேசிய தீவிர​வாத எதிர்ப்பு கொள்கை வெளியிடப்படு​கிறது. இதன்​படி தீவிர​வாத...
மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி நேற்று கேரள மாநில கும்பமேளா பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: கேரளத்​தின் திருச்​சூர் மாவட்டத்​தில் உள்ள ஒரு கிராமத்​தில் ஒரே ஒரு வயலில் மட்​டும் 570 வகை​யான நெற்​ப​யிர்​கள் சாகுபடி செய்​யப்​படுகிறது. இது விதைகளின் மரபைப் பாது​காக்​கும் பேரியக்​கம் ஆகும். உலகின் மிகப்​பெரிய அரிசி உற்​பத்​தி​யாள​ராக இந்​தியா உருவெடுத்திருக்கிறது. 15 கோடி டன்​களுக்​கும் மேலாக அரிசி உற்​பத்தி செய்​வது சாதாரண...