டெல்லி- ஒடிசா புருசோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணம் செய்த பயணிகள் சிலர் படுக்கை விரிப்பு, கம்பளி ஆகியவற்றை தங்கள் பைகளில் எடுத்துச் சென்று சிக்கினர். தொலை தூர ரயிலில்களில் தூங்கும் வசதி கொண்ட ஏ.சி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், கம்பளி ஆகியவை வழங்கப்படும்.
இரவில் தூங்கும்போது அவற்றை பயன்படுத்திய பின், பயணிகள் அவற்றை தங்கள் இருக்கையில் வைத்து விட்டு செல்வது...
பிரபல இந்தூர் ஷீதலா மாதா மார்க்கெட்டில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை: உள்ளூர் பாஜக தலைவர் உத்தரவால் சர்ச்சை
admin - 0
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்கெட் உள்ளது. இங்கு பெண்களுக்கான ஆடைகள் மொத்தமாக விற்கப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் இந்த மார்க்கெட் பிரபலமாக உள்ளது. இங்கு 501 கடைகள் உள்ளன. சமீபத்தில் இந்த மார்க்கெட் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
அதில் உள்ளூர் பாஜக தலைவரும் எம்எல்ஏ மகனுமான ஏகலைவா சிங் கவுர் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘ஷீதலா மாதா மார்க்கெட்டில்...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ‘ஆந்த்ராத்’ கடற்படையிடம் ஒப்படைப்பு
admin - 0
ஆழமற்ற கடற்பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்களை (ASW-SWC) கொல்கத்தாவின் ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினீயர்ஸ்' (GRESE) நிறுவனம் கட்டி வருகிறது.
இதில் முதலாவது போர்க் கப்பலான ‘அர்லானா' கடந்த ஜூன் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது போர்க் கப்பலை (ஆந்த்ராத்) இந்திய கடற்படையிடம் அந்த நிறுவனம் கடந்த சனிக்கிழமை ஒப்படைத்தது.
லட் சத்தீவு தீவுக்கூட்டத்தில் உள்ள ஆந்த்ராத் தீவிலிருந்து இதற்கான பெயர் பெறப்பட்டுள்ளது....
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து போலீஸார் சாலைகளில் நின்று, அபராதத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 12-ம் தேதிக்குள் அபராதத்தை செலுத்தினால் 50% தள்ளுபடி என போலீஸார் அறிவித்தனர்.
இதையடுத்து வாகன ஓட்டிகள் தாமாக முன்வந்து ஆன்லைன் மூலமாக அபராதத்தை செலுத்துவதில் ஆர்வம் காட்டினர். அதன்படி செப்டம்பர்...
கன்னட எழுத்தாளரும் வழக்கறிஞருமான பானு முஸ்தாக்கின் ‘ஹார்ட் லாம்ப்' நூலுக்கு அண்மையில் சர்வதேச புக்கர் பரிசு கிடைத்தது. இந்த விருதை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்பதால், இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஸ்தாக்கிற்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பானு முஸ்தாக் இந்துக்களின் தசரா விழாவை தொடங்கி வைக்க எதிப்பு தெரிவித்து மைசூருவின் முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா...
பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அங்குள்ள எஸ்எஸ்பி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஒரு...
ஆயுதங்களை கடத்தியதாக ராணுவத்தைச் சேர்ந்த 3 சுமைதூக்கும் நபர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக மாத சம்பள அடிப்படையில் சுமை தூக்கும் நபர்களை ராணுவ அதிகாரிகள் தற்காலிகமாக பணியமர்த்தி வருகின்றனர்.
இந்த சுமை தூக்கும் நபர்கள் சிக்கலான மலைப்பாதை, பனிமலைகளில் ராணுவ வீரர்களுக்கு உதவியாக இருப்பர். ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சுமந்து சென்று உதவி செய்வர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம்...
வர்த்தக செய்திகளை வெளியிடும் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா, வங்கதேசம், மியான்மர் மற்றும் பூடான் அருகேயுள்ள தனித்தனியான பகுதிகளை இணைக்கும் வகையில் சீன எல்லை அருகே 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து, 9,984 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைத்துள்ளது. தற்போது கூடுதாக 5,055...
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி, நடிகை ஊர்வசிக்கு அமலாக்கத் துறை சம்மன்
admin - 0
சட்டவிரோத சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 1xBet நிறுவனத்துக்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியது.
இந்நிலையில்,...
ஒடிசாவில் காந்தமால் மாவட்டத்தின் சலகுடா பகுதியில் சேவாஸ்ரம் பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள், சக மாணவர்கள் தூங்கி கொண்டிருக்கும் போது, அவர்களின் கண் இமையில், உடனடியாக ஒட்டிக் கொள்ளும் பசையை (குயிக் ஃபிக்ஸ்) ஊற்றி குறும்புத்தனம் செய்தனர்.
இதில் 8 மாணவர்களின் இமைகள் ஒட்டிக் கொண்டன. அந்த மாணவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்போது வலி மற்றும் எரிச்சலில் கூச்சலிட்டனர்....










