நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில்-கப்லாங் (என்எஸ்சிஎன்-கே) மற்றும் அதன் அனைத்து பிரிவுகள், முன்னணி அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு சட்டவிரோத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 28 முதல் இது அமலுக்கு வருகிறது.
உல்ஃபா (ஐ), பிரிபாக், பிஎல்ஏ போன்ற பிற சட்டவிரோத அமைப்புகளுடன் என்எஸ்சிஎன்-கே இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் இந்திய ராணுவ வீரர்கள்...
உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் மதுபானக் கடத்தல் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி பிரவீன் சேத்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், “ஜாதியை கொண்டாடுவது தேச விரோதமானது.
அரசியலமைப்பை மதிப்பது தேசபக்தியின் மிக உயர்ந்த வெளிப்பாடு” என்று கூறியிருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்ளுபடி செய்தார். எனினும், அவர் வெளியிட்ட உத்தரவில், “சமூகத்தில் ஜாதியைப் பெருமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
உ.பி.யின் அரசு...
ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தந்தை லாலு, சகோதரர் தேஜஸ்வி உள்ளிட்டவர்களுடன், ரோஹிணி ஆச்சார்யாவுக்கு கருத்து வேறுபாடு என்ற ரீதியில் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ரோஹிணி கூறியதாவது: எனக்கு எந்தவித அரசியல் லட்சியங்களும் இல்லை. அதேபோல் மாநிலங்களவை...
வடகிழக்கு மாநிலங்களுக்கு இரட்டை போனஸ்: அருணாச்சலில் ரூ.5,100 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் பெருமிதம்
admin - 0
அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் இரு நீர் மின் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் 9,820 அடி உயரத்தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்கவும் அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில்...
குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் முதல் நிகழ்ச்சி: பிரதமர் மோடியின் உரை குறித்த 4 புத்தகங்கள் வெளியீடு
admin - 0
குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தனது முதல் பொது நிகழ்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் உரை குறித்த புத்தக வெளீயீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டார். குடியரசு துணைத் தலைவர்களாக இருந்த எம்.வெங்கையா நாயுடு மற்றும் ஜெகதீப் தன்கர் ஆகியோரும் தங்களது பதவிக்காலத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்...
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நல்ல வாய்ப்பு: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து
admin - 0
சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பிரிவினையின் போது தங்கள் குடும்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு எப்படி வரநேர்ந்தது என்பது குறித்து சிந்தி நண்பர்களிடம் ஏராளமான கதைகளை கேட்டிருக்கிறேன். இந்தியாவில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பி சிறப்புடன் உள்ளனர்.
அதேபோன்று, விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் வல்லுநர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில்...
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு இந்த மாதம் தொடக்கத்தில் நடந்தது. அப்போது சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, வரும் அக்டோபர் 30-க்குள் கடைசியாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து பல மாநில தலைமை...
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா குறித்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. பொது நீர்நிலைகளில் குளிப்பதன் மூலம் பலர் இந்த கொடிய வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வேறு ஏதாவது தீர்வு கிடைக்கும் வரை நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
சில நீர் ஆதாரங்கள் பாதுகாப்பாக இருந்தபோதிலும் சுத்திகரிக்கப்படாத இயற்கை நீர்நிலைகளில் அச்சுறுத்தல் உள்ளது. அங்கே...
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. 2024-25-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலர். இந்நிலையில் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரியும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண் ணெய் வாங்குவதற்காக 25 சதவீத அபராத வரியும் விதித்தார்.
இரு நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக...
அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.22) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் ரூ.5,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22-ல் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இரு மாநிலங்களிலும் ரூ.5,100 கோடிக்கும் அதிகமான பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
மேலும்,...










