அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் தெரிவித்துள்ளார்.
“ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாய்களை திருடுவது போல அமெரிக்க தேசத்தின் திரைப்பட தயாரிப்புத் தொழிலினை மற்ற நாடுகள் களவாடியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கலிபோர்னியா தான். ஏனெனில், அங்கு பலவீனமான மற்றும் திறமையற்ற ஆளுநர் ஆட்சி பொறுப்பில்...
உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம் நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்துக்கு ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 625 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளது.
இரு மலைகளை இணைக்கும் விதமாக இந்தப் பாலம் மிகவும்...
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற பதாகை எடுத்து செல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து பரேலியில் வன்முறை ஏற்பட்டது.
இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ராஸ்வி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரேலியில் தற்போது அமைதி நிலவுகிறது. அங்கு எந்த தொந்தரவும் இல்லை. பக்தி வெளிப்பாடு தனிப்பட்டதாக இருக்க வேண்டும். தெருக்களில் ஊர்வலமாக...
இந்தியா மற்றும் பூடானுக்கு இடையில் 89 கிலோமீட்டர் தூரத்துக்கு கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-சம்ட்சே (மேற்கு வங்கம்) ஆகிய இரண்டு புதிய ரயில் இணைப்புகள் ரூ.4,033 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.
மத்திய அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் உடன் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதாவது: பனார்ஹட்-சாம்ட்சே மற்றும் கோக்ரஜார்- கெலெபு இடையே எல்லை தாண்டிய இரண்டு ரயில் வழித்தட இணைப்புகளை நிறுவ இந்தியா...
காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக 50 சுற்றுலா தலங்களை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மூடியது.
இந்நிலையில் விரிவான பாதுகாப்பு மறுஆய்வுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 12 சுற்றுலாத் தலங்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஸ்ரீநகரில் கடந்த வெள்ளிக்கிழமை...
நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் குறித்த ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தெரியவந்த விவரம் வருமாறு: நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 5.34 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் உயர் நீதிமன்றங்களில் 63.8 லட்சம் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் 88,251 வழக்குகளும்...
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்ளார். இந்நூலை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:பிரதமர் மெலோனியின் வாழ்க்கை ஒருபோதும் அரசியல் பற்றியதாகவோ அதிகாரத்தைப் பற்றியதாகவோ இருந்ததில்லை. இது அவருடைய தைரியம், உறுதிப்பாடு, பொது சேவை, இத்தாலியர்களின்...
பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக போராட்டம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2 பேர் உயிரிழப்பு
admin - 0
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்குழு அமைப்பின்(ஏஏசி) சார்பாக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. பாகிஸ்தான்...
தர்மஸ்தலா வழக்கில் திருப்பம்: பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக புகார்தாரர் சின்னையா வாக்குமூலம்
admin - 0
தர்மஸ்தலா வழக்கில் கைது செய்யப்பட்ட புகார்தாரர் சின்னையா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா கோயில் உள்ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்மைப் பணியாளராக வேலை செய்த சின்னையா கடந்த ஜூனில் தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார்.
அதில், “மஞ்சுநாதா கோயிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்....
வக்பு சட்டப் போராட்டம் குறித்து விஎச்பி கவலை: கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசிடம் வேண்டுகோள்
admin - 0
மத்திய அரசின் புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கவலை தெரிவித்துள்ளது.
வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மீது பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் அக்டோபர்...







