சத்தீஸ்கரில் நேற்று 42 பெண்கள் உட்பட 77 நக்சலைட்கள் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். நக்சல் அபாயம் உள்ள மாநிலங்களில் அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட்கள் ஒழிக்கப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நக்சலைட்கள் சரணடைவதும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்...
ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்து நேற்று பிற்பகல் 57 பயணிகளுடன் புறப்பட்டது. போர் அருங்காட்சியகம் அருகே தையத் கிராமத்தில் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பேருந்தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்பற்றி பேருந்து முழுவதும் மளமளவென பரவியது.
இதில், பயணிகள் அவசரமாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதால் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜஸ்தான் முதல்வர்...
ஹரியானா ஐபிஎஸ் அதிகாரியான பூரண் குமார் கடந்த 7-ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அம்னீத் பி.குமார், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
பட்டியல் வகுப்பை சேர்ந்த தனக்கு எதிராக மூத்த அதிகாரிகள் 10 பேர் சாதியப் பாகுபாடு காட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை 11...
மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரிதாப நிலை மற்றும் சாலை பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே, சந்தேஷ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ...
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஆயுத, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க பஞ்சாப் மாநில காவல் துறை சார்பில் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கடத்தல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பஞ்சாப் போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து ஏ.கே. 47...
கடன் அட்டை என்பது கடனாக பொருட்களை வாங்கவும் பல்வேறு கட்டணங்களை செலுத்தவும் மட்டுமே பயன்படும் என நாம் நினைக்கிறோம். ஆனால் வழக்கமான பயன்பாடுகளைத் தாண்டி, பணத்தை மிச்சப்படுத்துவதற்கான ஆதாரமாகவும் அவற்றைப் பயன்படுத்தி வருகிறார் மணிஷ் தமேஜா. அவரிடம் மொத்தம் 1,638 கடன் அட்டைகள் உள்ளன.
எந்த ஒரு கடனும் இல்லாமல் வெகுமதி புள்ளிகள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்றும் ஓட்டல் சலுகைகளை அதிகரிக்க இந்த கடன் அட்டைகளை அவர் பயன்படுத்தி...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என்று உத்தரவிட கோரியும் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில்...
மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீடுகளில் இருந்து 2.7 கிலோ தங்கம், 5.5 கிலோ வெள்ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மத்திய பிரதேச பொதுப் பணித் துறையில் தலைமை பொறியாளராக கோவிந்த் பிரசாத் மெஹ்ரா பணியாற்றினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் ஓய்வு பெற்றார். இதன்பிறகு தலைநகர் போபாலில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார்....
உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற தலங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலில் நேற்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வழிபட்டார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்று பிரசாதங்களை வழங்கினர்.
பலத்த பாதுகாப்புடன் முகேஷ் அம்பானி கோயிலுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சமோலிக்குச் சென்றார்.
சீன நாட்டை சேர்ந்தவர் ட்யூ யாங்கன். விசா நிபந்தனைகளை மீறியது, போலி ஆவணங்கள் தயாரித்தது, நிபந்தனைகளை மீறி இந்தியாவில் தங்கியது தொடர்பாக 2021-ம் ஆண்டு யாங்கன் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர், பல பகுதிகளில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்காகவே ரேணிகுண்டாவில்...










