டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்காக இனிப்புகள் வாங்க அங்கு சென்ற ராகுல் காந்தி தன் கையாலேயே சில இனிப்பு வகைகள் செய்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்டேவாலா...
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.
இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது மருந்துத்...
‘ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது’ – பிரதமர் மோடி நெகிழ்ச்சி
admin - 0
இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்த்தில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 143 வேட்பாளர்களின் பட்டியலை பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) வெளியிட்டுள்ளது.
ஆர்ஜேடி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அக்கட்சியின் இளம் தலைவரும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ரேணு குஷ்வாஹா, பிஹாரிகஞ்ச் தொகுதியிலும், அருண் குப்தா பர்ஹாரியா தொகுதியிலும் விஷால் ஜெய்ஸ்வால் மகாராஜ்கஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு...
மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக அறிவித்துள்ளதன் மூலம் சிபிஎம் - பாஜக கூட்டு அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கூறியுள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சன்னி ஜோசப், "மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் இணைவது என்ற கேரள அரசின் முடிவு, ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்பதற்கான சான்றாகும். சிபிஎம்...
பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதனிடையே பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு...
பிஹார் பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
admin - 0
மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிஹார் தேர்தலில் முதல்முறையாக முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுகிறது.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் நேற்று கூறியதாவது: இந்த தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்துள்ளது. எனவே தேஜஸ்விக்கு எதிராக ராகோபூரில் மற்றொரு வேட்பாளரை...
ஓலா, உபேர் போல செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவையை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து முதல் மாநிலமாக மகாராஷ்டிராவில் விரைவில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதே திட்டத்தை டெல்லி அரசும் அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லி கூட்டுறவுத் துறை அமைச்சர் ரவீந்தர் இந்த்ராஜ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஓலா, உபேர் போல செயலி...
பக்தர்களின் வசதிக்காக ரூ.4,081 கோடி செலவில் கேதார்நாத்தில் ‘ரோப் வே’ – தொழிலதிபர் கவுதம் அதானி அறிவிப்பு
admin - 0
அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி நேற்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உத்தராகண்ட் மாநிலத்தில் நெடிய மலைகளை கடந்து கேதார்நாத் கோயில் செல்ல வேண்டும். பக்தர்களின் வசதிக்காக, ‘ரோப் வே’ கட்டுமான பணிகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: பக்தர்கள் எளிதாக கேதார் கோயில் சென்று வருவதற்கு ஏற்ப,...
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக பேசிய மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுக்கு கொலை மிரட்டல்
admin - 0
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கர்நாடக தகவல் தொழில்நுட்ப மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துறை அமைச்சரும்,காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியாங்க் கார்கே அண்மையில் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், “ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பொது இடங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது போல், கர்நாடகாவிலும்...










