விமானப்படை துணைத் தளபதியாக இருந்த ஏர் மார்ஷல் நம்தேஸ்வர் திவாரி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தென்மேற்கு மண்டல தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் விமானப்படை துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் டெல்லியில் உள்ள வாயு பவனில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். விமானப்படையில் கடந்த 1986-ம் ஆண்டு சேர்ந்த நாகேஷ் கபூர், பலவித போர் விமானங்களை...
உத்தர பிரதேசத்தில் 2.88 கோடி வாக்காளர்கள் தங்களுக்கான எஸ்ஐஆர் படிவங்களை வாங்க வரவில்லை. இதற்கு நிரந்தர இடம் பெயர்வு காரணம் என தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், 2.88 கோடி பேர் தங்களுக்கான படிவங்களை வாங்க வரவில்லை. இவர்களில் 1.30 கோடி பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்திருந்தது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது அடையாளம் காணப்பட்டது. இவர்களின் சதவீதம்...
வீடியோவால் அம்பலமான கிட்னி திருட்டு விவகாரம்: திருச்சி மருத்துவருக்கு மகாராஷ்டிர போலீஸ் வலை!
admin - 0
சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ராஜரத்தினம் கோவிந்தசாமி தலைமறைவாக உள்ளதாக மகாராஷ்டிரா காவல் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் சந்திரபூரைச் சேர்ந்த இளம் சிறு விவசாயியான ரோஷன் குடே என்பவர் கடந்த மாதம் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் இருந்து தான் பெற்ற ரூ. 1 லட்சம் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை விற்றதாகவும், ஆனாலும், தான் வாங்கிய தொகை...
கொல்கத்தா- குவாஹாட்டி இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைப்பார் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. விரைவான பயணம், வசதியான இருக்கைகள், ஏ.சி. வசதி, பயோ கழிப்பறை, தானியங்கி கதவுகள், சிசிடிவி கண்காணிப்பு என பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதி நவீன வசதிகளை கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள்...
புத்தாண்டையொட்டி ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று ரந்தம்போருக்கு வருகை தந்தனர்.
சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ளது ரந்தம்போர் சரணாலயம். இது புலிகள் மற்றும் செழுமையான பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய இடமாகும். மேலும், இது, சுற்றுலாப் பயணிகளுக்கு மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், உதய்பூர், ஜோத்பூர் மற்றும் முக்கிய மத...
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேராவின் மகன் ரெஹானின் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த வகுப்புத் தோழி அவியா பெய்க்கை கரம் பிடிக்கிறார் ரெஹான்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா - ராபர்ட் வதேரா தம்பதிக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத்...
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33), 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகின. அவர் மீது வீட்டு பணிப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதே வீட்டு பணிப் பெண்,...
2025-ல் இந்தியாவில் நடைபெற்ற மாற்றங்கள், சாதனைகளை பட்டியலிட்டு சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு
admin - 0
2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு 2025-ம் ஆண்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டன. இது, இந்தியாவின் ஆண்டாக நினைவு கூரப்படும்.
குறிப்பாக 2025-ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 5% மற்றும் 18% என்ற இரு விகிதங்கள் மட்டும்...
உத்தராகண்ட் மாநிலம், அல்மோராவில் இருந்து ராம் நகருக்கு தனியார் பேருந்து நேற்று காலை புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 19 பேர் பயணம் செய்தனர்.
பிகியாசைன் மலைப்பகுதி சாலையில் பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்....
கடந்த 2017-ல் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் வேலை கேட்டுச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய...
