கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் வசித்த அருண் மிஸ்த்ரி, பிஹார் மாநிலம் சமஸ்திபூரில் வசித்த தந்தை மதன் மஹதோவுக்கு ரூ.1,500 மணி ஆர்டர் அனுப்பியுள்ளார்.
அப்போது நொய்டா அஞ்சலகத்தில் உதவி போஸ்ட் மாஸ்டராக பணியாற்றிய மகேந்திர குமார், அந்தப் பணத்தை கையாடல் செய்துள்ளார்.
இது தொடர்பாக நொய்டா கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், மகேந்திர குமாருக்கு 3 ஆண்டு...
ஹைதராபாத் அருகே பயங்கர சாலை விபத்து: அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 21 பேர் உயிரிழப்பு
admin - 0
ஹைதராபாத் அருகே நடந்த கோர விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், தாண்டூருவிலிருந்து நேற்று அதிகாலை 4.40 மணிக்கு தெலங்கானா அரசு பேருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது. 52 பேர் அமர கூடிய அந்த பேருந்தில் 72 பேர் பயணம் செய்தனர்.
சரியாக காலை 6.50 மணிக்கு சேவள்ளு அடுத்த மிர்ஜகூடா எனும் இடத்தில், ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக எதிரே...
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறுவினார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட சுரேஷ் சந்த் அகர்வால், உத்தர பிரதேசத்தின் விரிந்தாவன் நகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், சுரேஷ் சந்த் அகர்வாலை அவரது மகன் இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் அதே துப்பாக்கியால்...
பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் சுமார் 18% முஸ்லிம்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு (ஆர்ஜேடி) முஸ்லிம் வாக்குகளின் பலன் கிடைக்கிறது.
நவம்பர் 6-ல் நடைபெறவுள்ள தேர்தலில் 121 தொகுதிகளில் 18 முஸ்லிம்களுக்கு ஆர்ஜேடி வாய்ப்பளித்துள்ளது. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்எல்ஏக்.களும் இடம் பெற்றுள்ளனர்.
ஆர்ஜேடியுடன் இணைந்து 61 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸில் 10 முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளனர். இந்த மெகா...
பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மன்னர் சந்திரகுப்த மவுரியா ஆட்சிக் காலம் முதல் இப்போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்புகள் நீடித்து வருகின்றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மேலும் பிஹாரில்...
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி அழுதனர்.
விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து...
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமாக உள்ளது. டெல்லியில் செயற்கை மழை பொழியச் செய்து காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு கடந்த வாரம் இறங்கியது. ஆனால் காற்றில் போதிய ஈரப்பதம் இல்லாததால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “டெல்லி முழுவதும் சாம்பல் நிற துணியை போட்டு மூடியது போல் காற்று மாசு மிக மோசமாக...
பிஹார் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜன்சுராஜ் கட்சியைச் சேர்ந்த துலர்சந்த் யாதவை கொலை செய்த ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கான்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் வன்முறைகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. பிஹாரில் அமைதியான, சுந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய...
பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவனை, அவனது உறவினர்கள் கட்டிலுடன் பள்ளி வரை தூக்கிச் சென்ற வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் கட்டிலில் படுத்தபடி அடம்பிடித்தான்.இதைப் பார்த்த அவனது உறவினர்கள் இருவர் சிறுவனை கட்டிலுடன் தூக்கிச் சென்று பள்ளி வாசலில் வைத்தனர். அழுது கொண்டு கட்டிலில் தொங்கியபடி இருந்த மாணவனை மற்ற மாணவர்கள் பார்த்து சிரித்தபடி...
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்
admin - 0
பிஹார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிஹார் தேர்தல் வரும் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி...








