Google search engine
ஆந்​திரா மற்​றும் தெலங்​கானா மாநிலங்​களில் தொடர்ந்து பேருந்து விபத்​துகள் நடை​பெற்று வரு​வ​தால் பொது​மக்​கள் பீதி அடைந்​துள்​ளனர். கடந்த மாதம் 24-ம் தேதி கர்​னூல் அருகே பேருந்து தீப்​பற்றி 20 பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து அனை​வரை​யும் உலுக்​கியது. இதை தொடர்ந்து தெலங்​கானா மாநிலம், ரங்​காரெட்டி மாவட்​டத்​தில் தாண்​டூரு அருகே கடந்த 3-ம் தேதி அரசு பேருந்து மீது டிப்​பர் லாரி மோதி​ய​தில் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில், ஆந்​திர...
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதையொட்டி நக்​சலைட்​களுக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில் சரண் அடைவோருக்கு அரசு மறு​வாழ்வு அளித்து வரு​கிறது. . சத்​தீஸ்​கரில் கடந்த மாதம் மட்​டும் சுமார் 300 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர். இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் கேசிஜி (கை​ராகர்​-சுய்​காடன்​-கண்​டாய்) மாவட்​டத்​தில் முக்​கிய பெண் நக்​சலைட் ஒரு​வர் நேற்று சரண் அடைந்​தார். கமலா சோடி (30)...
கடந்த 2022-ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த முகம்​மது ஷரீப் ஷா என்​பவர் ஜம்​மு​வில் உள்ள முன்​னாள் அமைச்​சர் ஜதீந்​தர் சிங் என்​கிற பாபு சிங்​கிடம் ரூ.6.9 லட்​சம் ஹவாலா பணத்தை கொடுக்க முயன்​ற​போது போலீ​ஸாரிடம் பிடிபட்​டார். இந்​தப் பணம் இந்​தி​யா​வில் போதைப் பொருள் விற்​பனை மூலம் ஈட்​டப்​படு​வதும் பிரி​வினை​வாத மற்​றும் தீவிர​வாத செயல்​களுக்கு பயன்​படுத்​தப்​படு​வதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து பாபு சிங் ஏப்​ரல் மாதம் கைது செய்​யப்​பட்​டார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில்...
பிஹார் துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் குமார் சின்​ஹா, லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார். அங்​குள்ள வாக்​குச் சாவடிக்கு அவர் நேற்று சென்​றார். அப்​போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தொண்​டர்​கள் அவரது காரை சூழ்ந்து தாக்க முயன்​றனர். கற்​கள் மற்​றும் காலணி​களை கார் மீது வீசி எறிந்​தனர். அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸார், துணை முதல்​வர் விஜய் குமார் சின்​ஹாவை பாது​காப்​பாக அனுப்பி வைத்​தனர். இதுகுறித்து விஜய்...
பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்​னாள் முதல்​வரும் ராஷ்டி​ரிய ஜனதா தளம் தலை​வரு​மான லாலு பிர​சாத் யாதவ் நேற்று பாட்​னா​வில் உள்ள ஒரு வாக்​குச்​சாவடி​யில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் ஆகியோ​ருடன் சென்று வாக்​களித்​தார். இது தொடர்​பான புகைப்​படத்தை ‘எக்​ஸ்’ தளத்​தில் அவர் பகிர்ந்து கொண்​டுள்​ளார். இதில், “தவா​வில் உள்ள ரொட்​டியை புரட்​டிப்​போட வேண்​டும். இல்​லா​விடில் அது கரு​கி​விடும். 20...
பண மோசடி வழக்​கில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு தொழில​திபர் அனில் அம்​பானிக்கு (66) அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்​கள் தெரி​வித்​த​தாவது: அனில் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் குழும நிறு​வனங்​கள் வங்​கி​களில் கடன்​பெற்று அதனை முறை​யாக செலவு செய்​யாமல் பணமோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை ஏற்​கெனவே சோதனை நடத்தி அனில் அம்​பானி குழும நிறு​வனங்​களுக்கு சொந்​த​மான ரூ.7,500 கோடி மதிப்​பிலான சொத்​துகளை...
உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நேற்று காலை 9.15 மணிக்கு சோபன் - பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. இதில் இருந்து இறங்கிய பயணிகள் சிலர், எதிரில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது 3-வது லைனில் வேகமாக வந்த நேதாஜி எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் 6 பெண்கள்...
ஆந்​திராவில் பத்​திரப்​ப​திவு அலு​வல​கங்​களில் அதிக லஞ்​சம் வாங்​கப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​ எழுந்தது. இதையடுத்து, நேற்று ஒரே நேரத்​தில் என்​.டி.ஆர் மாவட்ட இப்​ரஹிம்​பட்​டினம், பிர​காசம் மாவட்​டம் ஓங்​கோல், விஜயநகரம் மாவட்​டம் போகாபுரம், சத்​ய​சாய் மாவட்​டம் சிலமத்​தூரு, பல்​நாடு மாவட்​டம் நரச​ராவ் பேட்​டா, திருப்​பதி மாவட்​டம் ரேணி​குண்டா உட்பட பல மாவட்​டங்​களில் 120 பத்​திரப்​ப​திவு மற்​றும் துணை பத்​திரப்​ப​திவு அலு​வல​கங்​களில் லஞ்ச ஒழிப்பு அதி​காரி​கள் சோதனை நடத்தினர். இதில் முக்​கிய ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றினர்.
 ராணுவத்​துக்கு மதம், ஜாதி ஆகியவை கிடை​யாது என ராகுல் கருத்​துக்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பதில் அளித்​துள்​ளார். பிஹார் மாநிலம் அவுரங்​கா​பாத்​தில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​னார். அப்​போது அவர் கூறுகை​யில், ‘‘ நாட்​டில் உயர் வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள் 10 சதவீதம் பேர் உள்​ளனர். இவர்​கள் கட்​டுப்​பாட்​டில்​தான் கார்​பரேட் நிறு​வனங்​கள், அரசு நிர்​வாகம், நீதித்​துறை, ராணுவ​மும் கூட இந்த 10 சதவீதத்​தினர்...
கர்​நாடக மாநிலம் மண்​டியா மாவட்​டத்​தில் உள்ள மூடனஹள்​ளியை சேர்ந்​தவர் மஞ்சே கவுடா (55). இவருக்கு சொந்​த​மான 2 ஏக்​கர் நிலம் கர்​நாடக வனத்​துறை இடத்​துக்கு அரு​கில் இருந்​தது. இதனால் வனத்​துறை அந்த நிலத்தை 3 ஆண்​டு​களுக்கு முன்பு கையகப்​படுத்​தி​யது. தனது நிலத்​துக்கு உரிய இழப்​பீடை உடனடி​யாக வழங்​கு​மாறு மண்​டியா மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தி​ல் மஞ்சே கவுடா மனு அளித்​தார். ஆனால் அரசு இழப்​பீடு வழங்​காமல் காலம் தாழ்த்​தி​யுள்​ளது. இந்​நிலை​யில் மஞ்சே கவுடா...