இளைஞர் கொலை வழக்கில் சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை: கும்பகோணம் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
admin - 0
பாபநாசம் அருகே முன்விரோத தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் 2 பேர் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மேல கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (22). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் செல்வமணியின் இருசக்கர வாகனத்தை, மருத்துவக்குடி பாரதியார் நகரைச் சேர்ந்த...
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மற்றும் உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜக வெற்றிக்கு முஸ்லிம் வாக்குகளின் பிரிவு சாதகமாகி உள்ளது. மேலும், அக்கட்சிக்கு இந்துத்துவா மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) பிரச்சாரமும் கூடுதல் பலனை அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்குகள் 12 சதவீதமாக உள்ளது. இங்குள்ள 288 தொகுதிகளில் 38-ல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். இந்த 38 தொகுதிகளில் பாஜக...
உத்தர பிரதேச கலவரத்தில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு: சமாஜ்வாதி எம்.பி., எம்எல்ஏ மகன் மீது வழக்கு பதிவு
admin - 0
உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சமாஜ்வாதி எம்.பி. மற்றும் எம்எல்ஏ மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கடந்த 19-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பல் மாவட்டம் சந்தவுசி நகரில் ஹரிஹர் கோயில் இருந்தது. முகலாயர் காலத்தில் இந்தக் கோயிலின்...
உலகின் முதல் இணை செயற்கைக்கோள்களை ஏவும் திட்டம்: டிசம்பர் 4-ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ
admin - 0
சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4-ம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்புகிறது.
சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இணை செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கு புரோபா-3 திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று இணையாக 150 மீட்டர் தூரத்தில் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் பறந்து சூரியனின் ஒளிவட்டப்...
ரூ.86 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த பில்லால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டெய்லர் அதிர்ச்சி அடைந்தார்.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலுள்ள சோர் கலி பகுதியில் நியூ பேஷன் டெய்லர் என்ற பெயரில் தையல் கடை நடத்தி வருபவர் அன்சாரி. இவர் தனது கடையின் மின் கட்டண பில்லை, யுபிஐ மூலம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் இவருக்கு மின் கட்டண பில் வந்தபோது அதைப் பார்த்து அன்சாரி அதிர்ச்சி...
பெண் தொழிலதிபரை ஆடையை களைந்து அவமதித்ததால் தற்கொலை: பெங்களூரு பெண் போலீஸ் அதிகாரி மீது வழக்கு
admin - 0
கர்நாடகா போவி மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் போவி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிக்கபள்ளாப்பூர், தொட்டபள்ளாபூர், கலபுரகி ஆகிய இடங்களில் வழக்குகள் பதிவான நிலையில், அந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து கடந்த 14-ம் தேதி பெங்களூருவில் உள்ள பத்மநாபா நகரை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஜீவா (33) என்பவரிடம் போலீஸார்...
கடந்த 10 ஆண்டுகளில் 853 இந்திய வருவாய் துறை அதிகாரிகள் (ஐஆர்எஸ்) விருப்ப ஒய்வை பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: கடந்த 2014 முதல் 2024 வரை வருமான வரி துறையைச் சேர்ந்த 383 ஐஆர்எஸ் அதிகாரிகள், சுங்கம் மற்றும் மறைமுக வரி துறையைச் சேர்ந்த 470 ஐஆர்எஸ் அதிகாரிகள் என மொத்தம்...
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு ஆய்வு குழு திருமலை, திருப்பதி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை விநியோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, முதலில்...
உ.பி.யில் உடைந்த பாலத்தில் இருந்து கார் ஆற்றில் விழுந்ததால் 3 பேர் உயிரிழந்தனர். கூகுள் மேப் உதவியுடன் சென்றதால் இந்த விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ளது.
உ.பி.யின் பரேலி மாவட்டம் பரித்பூரில் ராம்கங்கா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மீதுள்ள பாலத்தின் நடுப்பகுதி சமீபத்திய மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுபற்றி அறியாமல் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கார் இந்தப் பாலத்தை கடந்து செல்ல முயன்றது. இந்நிலையில் அந்த கார்...
தொழிலதிபர் அதானியின் ரூ.100 கோடி நன்கொடையை ஏற்க மாட்டோம் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதானி விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதானியிடமிருந்து தெலங்கானா அரசும் நன்கொடை பெற்றது என சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவை புகட்ட திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானித்தோம். இதற்கு...








