Google search engine
 மும்​பை​ தாக்குதலின்போது அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்​டபோதும், தப்​பித்த மும்பை பெண் அந்த பயங்கர​மான இரவை நினைவு கூர்ந்​துள்ளார். 2008-ம் ஆண்டு நவம்​பர் 26-ம் தேதி மகா​ராஷ்டிர மாநிலம் மும்பைக்கு இரவில் படகில் வந்த பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் 10 பேர் சரமாரி​யாக துப்​பாக்​கி​யால் சுட்​டுத் தாக்​குதல் நடத்​தினர். இதில் 166 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதல் நடந்து நேற்றுடன் 17 ஆண்​டு​கள் நிறைவடைந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த மும்பை பெண்...
நாட்​டின் வர்த்தக தலைநக​ரான மும்​பை​யில் போக்​கு​வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இதுதொடர்​பாக மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் மும்​பை​யில் நேற்று கூறிய​தாவது: மும்​பை​யில் புதிய சாலைகள், மெட்ரோ வழித்​தடங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது மும்பை பெருநகர போக்​கு​வரத்​தின் சராசரி வேகம் ஒரு மணிக்கு 20 கி.மீ. ஆக இருக்​கிறது. காலை, மாலை நேரங்​களில் 15 கி.மீ. ஆக இருக்​கிறது. மும்​பை​யின் போக்​கு​வரத்து நெரிசல் பிரச்​சினைக்கு தீர்வு காண சுரங்​கப்...
மேற்கு வங்​கம், தமிழ்​நாடு உள்​ளிட்ட 11 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறி​யுள்​ள​தாவது: மே.வங்​கத்​தில் அவசர அவசர​மாக வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. வாக்​குச்​சாவடி நிலை அதி​காரி​கள் மீதான அழுத்​தம் காரண​மாக பலர் தற்​கொலை செய்​து​ கொண்​டனர். இந்​நிலை​யில் தற்​போது இந்​தப் பணி​களில்...
டெல்லில் காற்று மாசுபாட்டின் அளவை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி நகரின் பல இடங்களில் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் செல்வது தடைபட்டுள்ளதால் அவற்றுக்கு வழிவிடுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். எனினும் போராட்டக்காரர்கள் நகர மறுத்ததால் அவர்களை போலீஸார் பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சிலர் போலீஸார் மீது...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சனத் நகரில் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளது. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வந்தனர். நேற்றும் வழக்கம்போல் மேற்கூரையில் பராமரிப்புப் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கீழ் தளத்தில் பணி செய்து கொண்டிருந்த 3...
காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500...
பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது. லாலு​வுக்கு சிறுநீரகம் தானம் செய்​தவரும் அவரது இரண்​டாவது மகளு​மான ரோகிணி ஆச்​சார்யா, தனது தம்பி தேஜஸ்​வி​யின் கூட்​டாளி​களால் தாம் பெற்​றோர் வீட்​டில் இருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​தாக கடந்த ஞாயிற்​றுக்​கிழமை குற்​றம் சாட்​டி​னார். இதற்கு முன் லாலு​வின் மூத்த மகன் தேஜ் பிர​தாப் கடந்த மே மாதம் கட்​சி​யில் இருந்​தும் குடும்​பத்​தில்...
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர்,...
சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்​தம் 90 ஆயிரம் பக்​தர்​கள் தின​மும் அனு​ம​திக்​கப்​படு​வர் என்று தேவசம் போர்டு தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஸ்பாட் புக்​கிங்​கில் கட்​டுப்​பாடின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதனால்...
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார். இதுகுறித்து ரோகிணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘லாலுவின் பெயரில் போலி அனுதாபம் காட்டுவதை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளில் உள்ள லட்சக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு தங்களது சிறுநீரகங்களை தானம் செய்ய அவர்கள் முன்வர வேண்டும். லாலு மீது அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால்,...