Google search engine
பி​ரான்ஸ் நாட்​டின் விமான இன்​ஜின் பழுது​பார்க்​கும் நிறு​வன​மான சஃப்​ரானின் ஆலை ஹைத​ரா​பாத்​தில் நேற்று முன்​தினம் திறக்​கப்​பட்​டது. இந்த ஆலையை பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் இருந்து காணொலி வாயி​லாக தொடங்​கி​வைத்​தார். அப்​போது அவர் பேசும்​போது, “வி​மான போக்​கு​வரத்து துறை​யில் இந்​தியா புதிய பாதை​யில் பயணிக்​கிறது. விமான பராமரிப்​பு, பழுது​ பார்ப்​பு, புதுப்​பித்​தல் துறை​யில் உலகின் மைய​மாக இந்​தியா உரு​வெடுக்க சஃப்​ரான் நிறு​வனம் உறு​துணை​யாக இருக்​கும்” என்று தெரி​வித்​தார். சஃப்​ரான் நிறுவன தலை​வர்...
மத்​திய பிரதேச மாநிலம் தர் மாவட்​டம் லபாரியா கிராமத்​தைச் சேர்ந்​தவர் கோவர்​தன்​லால் மாரு (படேல்). இவர் மாநில ஆதி​வாசி ஜதி சேவா சஹா​காரி சமி​தி​யில் மேலா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், வரு​மானத்​துக்கு அதி​க​மாக இவர் சொத்து சேர்த்​துள்​ள​தாக ஏராள​மான புகார்​கள் எழுந்​தன. இதையடுத்து இந்​தூரில் இருந்து லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நேற்று அதி​காலை 5.30 மணிக்கு திடீரென லபாரியா கிராமத்​துக்கு சென்​றனர். அதி​காரி​கள் 3 பிரி​வாக சென்று கோவர்​தன் லாலின்...
 ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனத்​தின் விக்​ரம் 1 ராக்​கெட்டை பிரதமர் மோடி நேற்று அறி​முகம் செய்​தார். அதோடு ஹைதரா​பாத்​தில் ஸ்கைரூட் நிறு​வனத்​தின் இன்ஃபினிட்டி வளாகத்​தை​யும் பிரதமர் மோடி திறந்து வைத்​தார். இஸ்ரோ நிறு​வனத்​தின் முன்​னாள் விஞ்​ஞானிகள் மற்​றும் ஐஐடி முன்​னாள் மாணவர்​களால் உரு​வாக்​கப்​பட்ட நிறு​வனம் ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ். இது நாட்​டின் முதல் தனி​யார் விண்​வெளி நிறு​வனம். இந்​நிறு​வனம் தயாரித்த விக்​ரம்​-எஸ் என்ற சிறிய ரக ராக்​கெட் கடந்த 2022 நவம்​பர் மாதம்...
ஜம்முவின் ரியாஸியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பதிண்டி பகுதியில் வசித்து வந்தார். சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் ஆன்லைன் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. மேலும், பாகிஸ்தான் மற்றும் இதர நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கத்தினருடன் அந்த இளைஞர் மொபைல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடமிருந்து டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. கைதான அந்த இளைஞர் மீது பிஎன்எஸ்...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.250 கோடிக்கு டெண்டர் எடுத்த நெய் ஒப்பந்ததாரர்கள், 40-சதவீதம் வரை கலப்பட நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மூலம் தெரியவந்தது. இதுவரை இவ்வழக்கில் ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு உதவிய மற்ற பால் நிறுவன அதிகாரிகள் என மொத்தம் 9 பேர்...
 ஹரியானாவில் கூடைப்பந்து கம்பம் சரிந்ததில் தேசிய அளவிலான வீரர் உயிரிழந்தார். ஹரியானாவின் ரோத்தக் நகரை சேர்ந்தவர் ஹர்திக் ரதி (16). தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர்.இவர் நேற்று முன்தினம் காலையில் தங்கள் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஒருமுறை மேலே எழும்பி கூடையின் விளிம்பை பற்றிய போது, கூடைப்பந்து கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது. உடனே அருகில் இருந்த நண்பர்கள் ஹர்திக்கை மீட்டு...
 ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வரும் சூழலில் பள்ளிகளுக்கு பிப்ரவரி 28 வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வருகிறது. நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.இந்நிலையில் ஜம்முவின் குளிர் மண்டலம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குளிர்கால...
வாக்​குரிமையை தவறாமல் பயன்​படுத்தி ஜனநாயகத்தை வலுப்​படுத்த வேண்​டியது நமது பொறுப்பு என அரசமைப்பு தினத்​தில் பிரதமர் மோடி வலி​யுறுத்தி உள்​ளார். நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு உரு​வாக்​கப்​பட்ட அரசி​யல் சாசன வரைவு, இந்​திய அரசி​யல் நிர்ணய சபை​யால் கடந்த 1949-ம் ஆண்டு நவம்​பர் 26-ம் தேதி ஏற்​றுக் கொள்​ளப்​பட்​டது. இதையொட்டி ஆண்​டு​தோறும் நவம்​பர் 26-ம் தேதி அரசி​யலமைப்பு தின​மாக கொண்​டாடப்​படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்​திய அரசு அறி​வித்​தது. இதன்​படி,...
உத்தர பிரதேசம், தமிழ்​நாடு, புதுச்​சேரி உள்​ளிட்ட 11 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் பணியை வரும் டிசம்பர் 4ம் தேதிக்​குள் முடிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், பணிச்​சுமை காரண​மாக எஸ்​ஐஆர் பணி​யில் ஈடுபட்டுள்ள அதி​காரி​கள் தற்​கொலை செய்து கொள்​ளும் சம்பவம் ஆங்​காங்கே நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், எஸ்​ஐஆர் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டிருந்த உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த அதி​காரி சுதிர் குமார் (25)...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள உரி நீர் மின் நிலையத்தை குறிவைத்தும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு...