Google search engine
இந்​திய காப்​பீட்டு துறை​யில் அந்​நிய நேரடி முதலீட்டை 100 சதவீத​மாக உயர்த்​து​வதற்​கான மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​துள்​ளது. மக்​களவை அறிக்​கை​யின்​படி, காப்​பீட்டு துறை​யில் முதலீட்டை அதி​கரிக்​க​வும், வளர்ச்சி மற்​றும் மேம்​பாட்டை துரிதப்​படுத்​த​வும், வணி​கம் செய்​வதை எளி​தாக்​கும் வகை​யில் காப்​பீட்டு சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2025 உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. நாடாளுமன்ற கூட்​டத்​தொடரில் அறி​முகம் செய்ய பட்​டியலிடப்​பட்ட 13 சட்​டங்​களில் இது​வும் ஒன்​றாகும். இந்த ஆண்டு பட்​ஜெட் உரை​யில், நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன்,...
சத்​தீஸ்​கரில் 6 பெண்​கள் உட்பட 10 நக்​சலைட்​கள் நேற்று சரண் அடைந்​தனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கிரண் சவான் நேற்று கூறிய​தாவது: அரசின் மறு​வாழ்வு திட்​டத்​தின் கீழ் போலீஸ், சிஆர்​பிஎப் மற்​றும் மாவட்ட அதி​காரி​கள் முன்​னிலை​யில் நக்​சலைட்​கள் சரண் அடைந்​தனர். இவர்​களை பற்​றிய தகவலுக்கு மொத்​தம் ரூ.33 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​கள் மற்​றும் வெடிபொருட்​களை இவர்​கள் ஒப்​படைத்​துள்​ளனர். இதன் மூலம் இம்​மாவட்​டத்​தில் இந்த ஆண்டு...
சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்​யக் கோரி மக்​களவை​யில் மனு அளிக்​கப்​பட்​டிருப்​ப​தற்கு 56 முன்​னாள் நீதிப​தி​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். திருப்​பரங்​குன்​றம் விவ​காரம் தொடர்​பாக திமுக, காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த எம்​பிக்​கள் கடந்த 9-ம் தேதி மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லாவை சந்​தித்​தனர். அப்​போது சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும் என்று...
மக்​களவை​யில் தேர்​தல் சீர்​திருத்​தங்​கள் குறித்து நேற்று முன்​தினம் நடை​பெற்ற விவாதத்​தில் எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா இடையே கார​சா​ர​மான விவாதம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​குத் திருட்டு குறித்த எனது செய்​தி​யாளர் சந்​திப்​பு​ குறித்து நாடாளு​மன்​றத்​தில் விவா​திக்க வரு​மாறு அமைச்​சர் அமித் ஷாவுக்கு நேரடி​யாக சவால் விடுத்​தேன். ஆனால் அவரிட​மிருந்து எந்த பதி​லும் கிடைக்​க​வில்​லை. அவர் தவறான...
குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு இரண்டு நாள் சுற்​றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். இம்​பால் விமான நிலையம் சென்றடைந்த அவரை ஆளுநர் அஜய் குமார் பல்லா வரவேற்​றார். இதையடுத்து அவர் லோக் பவனுக்கு புறப்​பட்​டார். 2022 ஜூலை​யில் குடியரசுத் தலை​வ​ராக முர்மு பொறுப்​பேற்​றுக் கொண்ட பிறகு அவர் மணிப்​பூருக்கு வருகை தரு​வது இதுவே முதல்​முறை. இந்த சுற்​றுப்​பயணத்​தின்​போது, மணிப்​பூரின் பெண் சுதந்​திரப் போ​ராட்ட வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தி, சேனாபதி மாவட்​டத்​துக்கு...
தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளைச் சேர்ந்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களுக்கு (எம்​பி) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தனது இல்​லத்​தில் இரவு விருந்து அளித்​தார். டெல்லியில் எண் 7, லோக் கல்​யாண் மார்க்​கில் உள்ள பிரதமர் மோடி​யின் இல்​லத்​தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிஹாரில் நடை​பெற்ற தேர்​தலில் என்​டிஏ கூட்​டணி அமோக வெற்றி பெற்​றதைக் கொண்​டாடும் வித​மாக இந்த விருந்து நடை​பெற்​றது. பொறுப்புணர்வுடன் மக்களுக்கு பணியாற்றுமாறு விருந்தில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு...
மேற்​கு​வங்க வாக்​காளர் பட்​டியலில் இருந்து பெயர் நீக்​கப்​பட்​டால் சமையல் பாத்​திரங்​களு​டன் பெண்​கள் போராட வேண்​டும் என்று அந்த மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார். வரும் மார்ச் அல்​லது ஏப்​ரல் மாதத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இந்த சூழலில் மேற்​கு​வங்​கத்​தின் கிருஷ்ணாநகரில் நேற்று நடை​பெற்ற திரிண​மூல் காங்​கிரஸ் பொதுக்​கூட்​டத்​தில்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்​தின்​போது காங்​கிரஸ் எம்.பி.ஜெபி மாத்​தர் ஹிஷாம் நேற்று பேசி​ய​தாவது: கேரள மாநிலம் கோழிக்​கோடு, திருச்​சூர், திரு​வனந்​த​புரத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​களில் அதிக அளவில் போலி மருந்​துகள் புழக்​கம் குறித்த திடுக்​கிடும் உண்​மை​கள் வெளிவந்​தன. இது ஒரு சிறிய தவறு அல்ல. இந்த சோதனை​கள் கேரள மருந்து கட்​டுப்​பாட்டு துறை​யின் முழு​மை​யான தோல்​வியை, திறமை​யின்​மையை அம்​பலப்​படுத்​து​வ​தாக உள்​ளது. மாநில மருந்து கட்டுப்​பாட்டு துறை​யின் அலட்​சி​யத்​தால்...
உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கத்​தில் பங்​கேற்று உரிமை கோரப்​ப​டாத பணத்தை மீட்​டுக்​கொள்ள வேண்​டும் என பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், பங்​குச் சந்​தை, பரஸ்பர நிதி நிறு​வனங்​களில், பல ஆயிரம் கோடி ரூபாய் பல்​வேறு காரணங்​களால் பொது​மக்​களால் நீண்ட கால​மாக உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளது. இந்​தத் தொகையை உரிய​வர்​களிடம் ஒப்​படைப்​ப​தற்​காக ‘உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கம்' கடந்த அக்​டோபரில் தொடங்​கப்​பட்​டது. இதுகுறித்து லிங்க்​டு...
திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்​கப்​பட்​டு, அதன் வழியே பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்பட உள்​ளனர். இதற்​கான ஆன்​லைன் டிக்​கெட்​டு​கள் இணை​யத்​தில் ஏற்​கெனவே வழங்​கப்​பட்டு விட்​டன. இந்​நிலை​யில், வரும் 23-ம் தேதி கோயில் ஆழ்​வார் திரு​மஞ்​சனம், 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை​யிலும், மற்​றும் ஜனவரி 25-ம் தேதி ரதசப்​தமி போன்ற நாட்​களில்...