உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல முக்கியமானக் கோயில்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பிரிவுகளின் துறவிகளுக்கான மடங்கள், தர்ம சத்திரங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் வாராணசி மாநகராட்சி வரி வசூலிக்கிறது.
வரி பாக்கி தொடர்பாக மாநகராட்சி கால அவகாசத்துடன் நோட்டீஸ் அளித்திருந்தது. வரி செலுத்தாதவர்களுக்கு ஜப்தி அறிவிப்பும் ஒரிரு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.இதற்கு துறவிகளும், மடங்களின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வாராணசி பாதாளபுரி மடத்தின் தலைவர்...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியதாவது:
மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் பொட்டி ஸ்ரீராமுலு. உப்பு சத்யாகிரகப் போராட்டத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் அவர் தீவிரமாக பங்கேற்றார். அவரது நினைவு நாளில் அவருக்கு தலைவணங்கி நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
அதேபோல், சுதந்திரத்துக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இந்தியா உருவாகப் பாடுபட்டவர் சர்தார் வல்லபபாய் படேல். சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் அமைதியான வாழ்க்கை...
தலைமை தகவல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் கோயல் நேற்று பதவியேற்றார்.
தலைமை தகவல் ஆணையராக இருந்த ஹீராலால் சமாரியாவின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு ஆலோசனை நடத்தியது. இதில் அந்தப் பதவிக்கு ராஜ்குமார் கோயல் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில்...
நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுடன் ஆலோசியுங்கள்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றபடுகிறது. ஆனால் தமிழக அரசு இருமொழி கொள்கையை சட்டமாக்கியுள்ளது” என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள்,...
கேரள மாநில அமைச்சர் வி.சிவன்குட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக 4 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் தொழிலாளர்களுக்கு எதிரான பல அம்சங்கள் உள்ளன. இந்த சட்டங்களைக் கண்டித்து வரும் 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் தொழிலாளர் மாநாட்டை கேரள அரசு நடத்தவுள்ளது. மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கவுள்ளார்.
மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் நலனுக்கு...
பிஹார் மாநில அமைச்சராக உள்ள நிதின் நபின் (45), பாஜகவின் தேசிய செயல் தலைவராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இந்த தகவலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தெரிவித்திருந்தார். இவர் ஜே.பி.நட்டாவுக்கு அடுத்தபடியாக தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நிதின் நபின் பாட்னாவிலிருந்து நேற்று மதியம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு அவரை டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட கட்சி...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. இந்த மூவரும்...
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் (90) மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று காலமானார்.
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரை சேர்ந்த வர் சிவராஜ் பாட்டீல். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் 1972-ம் ஆண்டு முதல் முறையாக மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 2 முறை எம்எல்ஏவாக இருந்தபோது, முதலில் துணை சபாநாயகராகவும், பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தேசிய அரசியலுக்கு வந்த அவர், 1980-ம் ஆண்டு முதல் முறையாக லாத்துார்...
ஆந்திராவில் தனியார் சுற்றுலா பேருந்து மலைச்சரிவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 6-ம் தேதி 33 பயணிகள் ஓட்டுனர், உதவியாளர் என மொத்தம் 35 பேர் தனியார் பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் ஆந்திராவின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அன்னவரம் சத்யநாராயண சுவாமியை தரிசித்து விட்டு, அங்கிருந்து பத்ராச்சலம் ராமரை தரிசிக்க...
சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.
கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போதைய டெல்லி அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன்படி சில மாதங்களுக்கு முன்பு 19 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு...
