குறைந்த விலைக்கு ஏ.ஆர்.டெய்ரியிடம் நெய் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? – திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு
admin - 0
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதான குற்றச்சாட்டில் உண்மை நிலவரம் என்ன என்பதை ஆராய, ஆந்திர அரசு ‘எஸ்ஐடி’ என்னும் சிறப்பு விசாரணைக் குழுவை குண்டூர் ஐஜி சர்வேஷ்ட்ர திரிபாதி தலைமையில் அமைத்துள்ளது.
இந்தக் குழுவில், விசாகப்பட் டினம் டிஐஜி கோபிநாத் ஜெட்டி, கடப்பா எஸ்பி. ஹர்ஷவர்தன் ராஜுஉட்பட மொத்தம் 9 பேர் இடம்பெற்று உள்ளனர். இவர்கள் 3-வது நாளாகநேற்றும் விசாரணை நடத்தினர்.அப்போது திருமலை...
மத்திய உளவுத்துறை பெங்களூருவில் உள்ள ஜிகனியில் பாகிஸ்தானியர் ஒருவர் குடும்பத்துடன் வசிப்பதாக பெங்களூரு போலீஸாருக்கு தகவல் அளித்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 48வயதான பாகிஸ்தானியர் ஒருவரும், அவரது மனைவி, மாமனார்,மாமியார் ஆகியோர் சிக்கினர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், 48 வயதான அந்த நபரின்உண்மையான பெயர் ரஷித் அலிசித்திக் என தெரியவந்தது. பாகிஸ்தானில் காராச்சியை சேர்ந்த இவர்,கடந்த 2013-ம் ஆண்டு வங்கதேசத் தில்...
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் உத்தர பிரதேசத்தில் ஏழரை ஆண்டுகளில் 7,000 கிரிமினல்கள் கைது
admin - 0
உத்தர பிரதேசத்தில் ஏழரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 49 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்றுமாநில அதிரடிப்படை யான எஸ்டிஎப் தெரிவித்துள்ளது.
உ.பி.யில் கடந்த மார்ச் 2017-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அப்போது உ.பி.யில் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல், வினாத்தாள் கசிவு,சைபர் குற்றங்கள், நில அபகரிப்புஎன குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதாக புகார் நிலவியது. சட்டம்ஒழுங்கும்...
முஸ்லிம்கள் அதிகரித்து விட்டதால் உ.பி.யில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்: சமாஜ்வாதி எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை
admin - 0
உ.பி.யின் அம்ரோகா தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மெகபூப்அலி. முன்னாள் அமைச்சரான இவர், பிஜ்னோரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “உ.பி.யில் பாஜக ஆட்சிமுடிவுக்கு வரும். மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர் என்பதை நாட்டை எரித்து வருவோர் உணர வேண்டும். மக்களவைத் தேர்தலில் மக்கள்தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2027 சட்டப்பேரவை தேர்தலில் உங்கள் ஆட்சி முடிவுக்கு...
பிரசாதங்களை கோயில் பூசாரிகளின் மேற்பார்வையில் தயாரிக்க வேண்டும்: ராமர் கோயில் தலைமை பூசாரி வலியுறுத்தல்
admin - 0
திருப்பதி ஏழுமலையான் கோயில்பிரசாதமான லட்டுவில், விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா போன்ற இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் பிரசாதங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று பலர் குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர்கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் நேற்று...
அரிமளம் அருகே விவசாயி கொலை வழக்கில் 3 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அரி மளம் அருகேயுள்ள ஆணைவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி(65). அதே ஊரைச் சேர்ந்தவர் சு.பூசையா(45). அங்குள்ள அடிச்சிஅம்மன் கோயிலை யார் முன்னின்றுகட்டுவது என்பது தொடர்பாக இவர்களிடையே தகராறு இருந்தது. மேலும், காந்திக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் விநியோகத்துக் காக அமைக்கப்பட்ட மின் மோட் டாரை தனது விருப்பத்துக்கு...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் காயம்
admin - 0
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் இன்று (சனிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேரும், ஒரு போக்குவரத்துக் காவலரும் காயம் அடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குல்காம் மாவட்டத்தின் தேவசார் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படை வீரர்கள் தொடங்கிய நிலையில் இந்த துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “துப்பாக்கிச் சண்டையின் போது திசைமாறி...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அவரின் பேச்சு ‘பாசாங்குதனத்தின் மோசமான நிலை’ என்று சாடியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வில் நடந்த பொது விவாதத்தின் போது வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசியதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஐநா பொதுச் சபையில் இந்தியாவின் பிரதிநிதி பவிகா கூறியதாவது:...
இந்திய வானிலை ஆய்வு மையம் பிஹாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஹாரின் மேற்கு மற்றும் கிழக்கு சம்பரான், சீதாமர்ஹி, ஷீயோகர், முசாபர்பூர், கோபல்கஞ்ச், சிவான், சரண், வைஷாலி, பாட்னா, மதுபான மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இந்த மாவட்டங்களில் அடுத்த...
புனே, டெல்லி, கொல்கத்தா ஆராய்ச்சி மையங்களில் பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
admin - 0
பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிராவின் புனேவில் அரசு நலத்திட்ட விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரூ.20,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பலத்த மழை காரணமாக புனே அரசுநலத்திட்ட விழா ரத்து செய்யப்பட்டது. எனினும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக...










