Google search engine
திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் கூடத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (சனிக்கிழமை) காலை திறந்து வைத்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாக பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு நேற்றிரவு காணிக்கையாக வழங்கினார். மேலும், சுவாமியை தரிசித்து,...
பெங்களூரு: சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னட பத்திரிகையாளர் திரேந்திரா எழுதிய, ‘காந்தியின் கொலையாளி: நாதுராம் கோட்சேயின் உருவாக்கம்' என்ற நூலை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்றுமுன்தினம் மாலை பெங்களூருவில் வெளியிட்டார். அப்போது தினேஷ் குண்டுராவ் பேசுகையில், "சாவர்க்கர் பிராமணராக இருந்தாலும் மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். அவர் ஒருபோதும் பசுவதைக்கு எதிராக இருந்ததில்லை. இறைச்சி சாப்பிடுவதை வெளிப்படையாக...
 ராணுவத்தின் மருத்துவப் படைப்பிரிவு வீரர் நாராயண் சிங் பிஷ்ட்.கடந்த 1968-ம் ஆண்டு சண்டிகரிலிருந்து லே நகருக்கு சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன்-12 விமானம் இமாச்சல பிரதேசத்தின் ரோக்டங் என்ற இடத்தில் பிப்ரவரி 7-ம் தேதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த நாராயணசிங் உட்பட 4 பேரின் உடல்களை எங்கு தேடியும் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையி்ல், 56 ஆண்டுகளுக்குப் பிறகு அடர்ந்த பனிப் பகுதியிலிருந்து நாராயண்...
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுமாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. காலை 7 மணி முதல்மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இங்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இங்கு2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1031 வேட்பாளர்கள்...
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அளித்த பேட்டி: கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பூரம் திருவிழாவில் சதி செய்ய சில முயற்சிகள் நடந்தன. இது குறித்து ஏடிஜிபி அஜித்குமார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அந்த அறிக்கை கடந்த மாதம்23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பூரம் விழாவை நடத்த கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளால், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால்...
புதுடெல்லி: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சக்தி வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான திருவிழா அனைவருக்கும் மங்களகரமானதாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் கவுடில்யர் பொருளாதார மாநாடு இன்று தொடங்கி வரும் 6-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி...
மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில்இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்துக்கு (சிமி) தொடர்பிருக்கலாம் என இவ்வழக்கின் பிரதான குற்றவாளியும், பாஜக தலைவருமான பிரக்யா தாக்குரின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு முகமை வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஏ.கே. லகோட்டி அமர்வு முன்பு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது,...
மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. கடந்த அக்டோபர் 12, 2004...
தலைநகர் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 5 ஆயிரத்து 600 கோடி ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக துஷார் கோயல், ஹிமசு குமார்,அவுரங்கசீப் சித்திக், பாரத் குமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைதுசெய்து...
தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி டெல்லி விங்யான் பவனில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்நரேந்திர மோடி கலந்துகொண்டுபேசியதாவது: தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டு நிறைவதையொட்டி `சேவா பக்வாடா' என்ற பெயரில் கடந்த 15 நாட்களில் 27 லட்சம் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இதில் 28 கோடிபேர் கலந்துகொண்டனர். நாடு வளம் பெறுவதற்கான புதிய பாதையாக மாறியுள்ளது தூய்மை இந்தியா...