புதுடெல்லி: அக்டோபர் 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த 9-ம் தேதி தெரிவித்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக அல்ஜீரியா, மவுரிடானியா மற்றும் மலாவி நாடுகளுக்கு...
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “2019 ஆம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் மறுகட்டமைப்பு சட்டத்தின் 73ஆவது பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து உரிமை கோரிய நிலையில்...
புதுடெல்லி: விஜயதசமி தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விஜயதசமியின் புனிதமான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி விழா. இந்த திருவிழா உண்மை மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளில் நமது நம்பிக்கையை குறிக்கிறது.
மிகவும்...
‘இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?’ – ரயில் விபத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கேள்வி
admin - 0
புதுடெல்லி: “அரசு விழித்துக் கொள்ளும் முன் இன்னும் எத்தனைக் குடும்பங்கள் அழிய வேண்டும்” என்று மைசூரு தார்பங்கா ரயில் விபத்தை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இது தொடர்பாக அவர் இன்று (அக்.12) தனது எக்ஸ் பக்கத்தில், “மைசூரு - தார்பங்கா ரயில் விபத்து பாலாசோர் விபத்தின் கோரத்தை நினைவூட்டுகிறது. ஒரு பயணிகள் ரயில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற...
வியன்டியன்: லாவோஸில் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு. காலிஸ்தான் பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ என அழைக்கப்படுகிறது. அதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பில் 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில்...
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பொழிவு. இடி, மின்னலுடன் மழை பொழிந்த காரணத்தால் நவராத்திரி கொண்டாட்டத்தில் இடையூறு. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மும்பை, பால்கர், தானே, ராய்காட், புனே மற்றும் பிற பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. மழையின் போது பலத்த காற்றும் வீசியது. தானே, முலுண்ட், குர்லா, காட்கோபர்,...
மும்பை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். அவரது உடல் மும்பையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
கடந்த 1937-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நவால் டாடா, சூனி கமிசாரியட் தம்பதியின் மூத்த மகனாக ரத்தன் டாடா பிறந்தார். மும்பை, சிம்லா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த அவர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிட பொறியியலில் பட்டம்...
புதுடெல்லி: ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இது, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஹரியானா தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. உயர்மட்ட தலைவர்கள் அடங்கிய இதற்கான கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே...
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் (ஜேகேஎன்சி) சட்டப் பேரவைக் குழு தலைவராக உமர்அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த 2019-ல் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370—வது சிறப்புப் பிரிவு நீக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1-ம் தேதிகளில் 3...
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரம்மாண்டமான கும்பமேளா விழா தொடங்க உள்ளது. இதை அகில இந்திய அகாடா பரிஷத்தினர் நடத்துகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளா விழா ஏற்பாடுகள் குறித்து அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். விழா தொடர்பான பல தீர்மானங்களை இயற்றி அவற்றை அமல் படுத்தும்படி உ.பி. மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், அகாடா பரிஷத்தினர் நேற்று நடத்திய கூட்டத்தில் சில புதிய...










