Google search engine
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில்...
ய​முனை நதி தூய்மைப்படுத்​தும் திட்​டம் குறித்து டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: யமுனை நதி நமது நம்​பிக்​கை​யின் சின்​னம். ஆனால், டெல்​லியை ஆண்ட முந்​தைய அரசுகள் யமுனையை புறக்​கணித்து விட்​டன. யமுனையை சுத்​தம் செய்ய அக்​கறை காட்​ட​வில்​லை. ஆனால் முன்​னாள் முதல்​வர் கேஜ்ரி​வால் யமுனை நதி நீரை குடிப்​பேன் என்று பேசி​னார். அதை அவர் நிறைவேற்​ற​வில்​லை. பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்​றவுடன் யமுனையை சுத்​தம் செய்ய...
அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இஸ்ரேல் - ஈரான் போர் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று...
ஈ​ரானிலிருந்து 1,428 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இஸ்​ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. இதையடுத்​து, ஆபரேஷன் சிந்து திட்​டத்​தின் மூலம் ஈரானில் உள்ள இந்​தி​யர்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர். இதற்​கான ஏற்​பாடு​களை ஈரானில் உள்ள இந்​திய தூதரக​மும் மத்​திய வெளி​யுறவு அமைச்​சக​மும் செய்து வரு​கிறது. இது​வரை 4 தனி விமானங்​களில் மாணவர்​கள் உட்பட 1,100...
ரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான். இவர் மும்பை, தானே மற்றும் புனே நகரில் அரசு ஒதுக்கீட்டு குடியிருப்புகளை சலுகை விலையில் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.24.78 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சூரத் நகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர்...
ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியபோது 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக...
5 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிம் மாநிலகத்திலுள்ள நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கியுள்ளது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் கடந்த 2020-ல் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நாதுலா கணவாய் வழியாகச் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த யாத்திரை ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். கைலாஷ்...
ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தாலியை முதிய தம்பதிக்கு ரூ.20-க்கு கொடுத்தது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கோபிகா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருக்கும் நிலேஷ் கிவான்சரா கூறியதாவது: என்னுடைய கடைக்கு சில நாட்களுக்கு வந்த ஒரு மூத்த தம்பதியினர் நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றனர். சில நாட்கள் கழித்து சத்ரபதி சாம்பாஜிநகரிலுள்ள எங்கள் கடையின்...
சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஏலத்தில் தனியார் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (ஐஎன்-ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் தயாரிப்பதற்கான ஏலத்தை எச்ஏஎல் வென்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் விண்வெளி துறையில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் அரசின்...
இன்று ஜூன் 21-ம் தேதி சர்​வ​தேச யோகா தினம் நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், மத்​திய அரசின் ஆயுஷ் அமைச்​சகத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, உ.பி.​யின் அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் ‘ஒய்​-பிரேக்' எனும் பெயரில் அனை​வருக்​கும் யோகா செய்​வதற்​கான நேரம் ஒதுக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உ.பி. அரசு வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: யோகா நெறி​முறையை அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் செயல்​படுத்த வேண்​டும். இந்த முயற்சி இந்​தி​யா​வின் யோகா பாரம்​பரி​யத்தை நிலைநிறுத்​து​வது மட்​டுமல்​லாமல், யோகாவை...