விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் அவர் 9 மாதங்களுக்கு மேல் அங்கு தங்க நேரிட்டது....
நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் கூறும்போது, ‘‘வக்பு சட்டத் திருத்த மசோதாவில் உள்ள மற்ற அனைத்து திருத்தங்களையும் ஆதரிக்கிறோம்.
ஆனால், மாநில வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவர் இடம்பெற வேண்டும்...
மகா போதி கோயில் நிர்வாகக் குழுவில் இந்துக்களை நீக்ககோரி பிஹாரில் பவுத்தர்கள் மீண்டும் தீவிர போராட்டம்
admin - 0
பிஹார் மாநிலம் புத்த கயாவில் அமைந்துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்குள் உள்ளது. இக்கோயிலை நிர்வகிக்க, மகா போதி கோயில் சட்டம் 1949 (பிஜிடிஏ)-ஐ பிஹார் மாநில அரசு இயற்றியது. இச்சட்டத்தின்படி, மகா போதி கோயிலின் நிர்வாக குழுவில் பவுத்தர்கள் மற்றும் இந்துக்கள் தலா 4 பேரை பிஹார் அரசு நியமிக்கிறது.
இக்குழுவின் நிரந்தர தலைவராக புத்த கயா மாவட்ட ஆட்சியர் இருப்பார்....
பாஜகவில் தேசிய தலைவரை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை: மக்களவையில் அகிலேஷ் கேள்விக்கு அமித் ஷா பதிலால் சிரிப்பலை
admin - 0
மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சமாஜ்வாதி எம்.பி அகிலேஷ் யாதவ் இடையிலான அரசியல் கிண்டலால் சிரிப்பலை எழுந்தது.
வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் பேசும்போது, “இந்த மசோதா நம்பிக்கையை கொடுக்கும் என அமைச்சர் கூறுகிறார். ஆனால் அது எப்படி என்று ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார். அப்போது அவையில் சிரிப்பலை...
அரசியல் என்பது எனக்கு முழுநேர பணி அல்ல என்றும் உண்மையில் நான் ஒரு துறவி என்றும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியில் இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 17-ம் தேதி 76-வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். எனவே, நரேந்திர மோடி விரைவில் பிரதமர்...
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30-வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
நலிவுற்ற வனவிலங்குகளுக்காக வந்தாரா என்ற முகாமை ஆனந்த் அம்பானி அமைத்துள்ளார். பிரதமர் மோடியும் சமீபத்தில் அங்கு வந்து வனவிலங்குகளை பார்த்து ரசித்தார். அந்த முகாமுக்கு மத்திய அரசின் விருதும் கிடைத்துள்ளது.
ஆனந்த் அம்பானியின்...
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற பட்டாசு விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தீசா நகரம். இங்குள்ள பட்டாசு ஆலையில் ஊழியர்கள் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 9.45 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பட்டாசு ஆலை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது....
வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த மாநிலங்களை சேர்ந்த 35 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. கடந்த 2018-ம் ஆண்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆகவும்...
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும். இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில்...
கடன் தர மறுத்ததால் வங்கியில் ரூ.13 கோடி தங்க நகை திருட்டு: மதுரை பேக்கரி கடைக்காரர் உட்பட 6 பேர் கைது
admin - 0
கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள நியாமதி டவுனில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. கடந்த ஆண்டு இந்த வங்கியில் ரூ.13 கோடி மதிப்பிலான 17.7 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றனர். இதனால் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே நியாமதி டவுனை சேர்ந்த உள்ளூர் குற்றவாளிகளையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது உள்ளூரை சேர்ந்த சிலர் அதில்...










