இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அவரது தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தனர். அப்போது சாய்ரா பானு ஆடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் உடல்நலன் சார்ந்து மும்பையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த...
இயக்குநர் சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மீண்டும் ரி-ரீலிஸ் ஆகிறது.
சேரன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோஃகிராப்’. கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி மறுவெளியீடு செய்ய படக்குழு தயாராகி வருகிறது. மே மாதம் சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருக்கிறது.
2004-ம் ஆண்டு பிப்ரவரி...
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
‘சலார்’ படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் பிரசாந்த் நீல். இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க பணிகளைத் தொடங்கினார்கள். நீண்ட நாட்களாகவே இதன் நடிகர்கள் ஒப்பந்தம் மற்றும் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இன்று (பிப்.20) முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜூனியர்...
சர்வதேச திரைப்பட தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் நேற்று தொடங்கியுள்ளது. மார்ச் 8-ம்தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
தொடக்க நாளான நேற்று கிரண் ராவ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான "லபதா லேடீஸ்" திரைப்படம் திரையிடப்பட்டது. இது, பார்வையாளர்களை வெகுவாக...
‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு நடிகர் ஆதி பதிலளித்துள்ளார்.
பிப்ரவரி 28-ம் தேதி அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள ‘சப்தம்’ படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக அளித்த பேட்டியில் ‘மரகத நாணயம் 2’ குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஆதி.
அதில் ‘மரகத நாணயம் 2’ விரைவில் தொடங்கவுள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. முதல் பாக...
மாரி செல்வராஜ் இயக்கி வந்த ‘பைசன் காளமாடன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் மாரி செல்வராஜ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னையில் கபடி போட்டி நடைபெறுவது போன்று அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
’பைசன் காளமாடன்’...
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.1871 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
கடந்த ஆண்டு டிச.5 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம்...
விஜய்யின் ‘கோட்’ படத்தின் வசூல் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெளிவாக பதிலளித்திருக்கிறார்.
‘டிராகன்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டியொன்று அளித்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. அந்தப் பேட்டியில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில் அர்ச்சனா கல்பாத்தி “450 கோடி வசூல் என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் திரையரங்கைத் தாண்டி உள்ள வியாபாரம் எதுவும் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் பெரிதாக இருக்கும்.
நாங்கள்...
ரவி மோகன், நித்யா மேனன், வினய், யோகி பாபு, லால், லட்சுமி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தன்பாலின ஈர்ப்பு, லிவிங் டுகெதர் நவீன காதலை கதைக்களமாக கொண்டு உருவானது...
நடிகர் செந்தில் கேங்ஸ்டராக நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், பொன்னம்பலம், ரவிமரியா, கனல் கண்ணன், சென்ராயன் என பலர் நடிக்கும் இந்தப் படத்தை பிஎம்எஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில் முரளி பிரபாகரன் தயாரிக்கிறார். சாய் பிரபா மீனா இயக்குகிறார்.
நாற்காலியில் அமரப்போகும் தலைவன் யார் எனும் போட்டி, நான்கு கேங்ஸ்டர் குழுக்களுக்கு இடையே நடக்கிறது. அதில் வெல்லப்போவது யார்? என்பது கதை....










