Google search engine
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூன் 5- ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்...
‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை இப்போது எடுத்து வெளியிட்டால், திரையரங்குகள் எரிக்கப்படும் என்று ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு ராஜீவ் மேனன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை இன்றைய காலகட்டத்தில் எடுக்க முடியாது. இந்தியாவின் சூழ்நிலை மிகவும் நிலையற்றதாகி விட்டது. மக்கள் மிகவும் வலுவான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். மதம் மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டது. ‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை நீங்கள் எடுத்து, அதை...
ஜோதிகா இல்லையென்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என்று ‘ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஏப். 19)...
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்…’, ‘இளமை இதோ இதோ…’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் ‘குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு...
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி (44). இவர் ‘பிளானட் 54’, ‘எ சேஞ்ச் ஆஃப் ஹார்ட்’, ‘கேர்ள்ஸ் ட்ரிப்’, ‘ரெசிடன்ட் எவில்: த பைனல் சாஃப்டர்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவர்டு என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபோதையில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கடந்த திங்கள்கிழமை புகார் எழுந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து...
‘தமிழன்’ மஜீத் இயக்கத்தில் விமல், யோகிபாபு நடித்துள்ள முழு நீள காமெடி படம், ‘கரம் மசாலா’. சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. “இந்த நவீன உலகத்தில் பல...
ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திரைத்துறைத் தாண்டி சமூகத்துக்கான சில விஷயங்களையும் தனது குழுவுடன் செய்துவருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து… “அதுக்குள்ள 10 வருஷமாச்சுங்கறது ஆச்சரியமாகத்தான் இருக்கு. 2015-ம் வருஷம் சினிமாவுல அறிமுகமானேன். அப்புறம் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்னு சினிமாவுல ஒரு முழு...
தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை கடந்து, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான...
‘முரா' படத்தைத் தொடர்ந்து ஹிர்து ஹாரூன் நடிக்கும் படத்துக்கு ‘மைனே பியார் கியா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜியோ பேபி, காந்த் வெட்டியார், ரெடின் கிங்ஸ்லி, பாபின் பெரும்பில்லி, திரி கண்ணன், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்குகிறார். தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு டான் பால். பி ஒளிப்பதிவு செய்கிறார். எலக்ட்ரானிக் கிளி...
சிபி சத்யராஜ் நாயகனாக நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் படமான ‘டென் ஹவர்ஸ்’ வரும் 18- தேதி வெளியாகிறது. இதை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். சரவணன், கஜராஜ், ராஜ் ஐயப்பா, தங்கதுரை, குரேஷி, முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் மூலம் இளையராஜா கலியபெருமாள் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் பற்றி சிபி சத்யராஜ் கூறும்போது, “சென்னையிலிருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு கொலை நடக்கிறது. அதை...