வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் அட்வைஸ் செய்துள்ளார்.
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சில் ஒன்று நடைபெற்றது. அதில் ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி.பிரகாஷ், சுனில், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, முதலில் நண்பர் ஜி.வி.பிரகாஷுடன்...
பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் ‘ஸ்பிரிட்’. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தான் தொடங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
’ஸ்பிரிட்’ படத்துக்கு முன்னதாக, ‘ஃபாஜி’ மற்றும் ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களை முழுமையாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் பிரபாஸ்....
என்னை நம்பிய முதல் ஸ்டார் அஜித் தான் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் வெங்கட்பிரபு. அதில் அஜித் மற்றும் ‘மங்காத்தா 2’ குறித்த கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு, “’மங்காத்தா 2’ குறித்து தெரியவில்லை. ஆனால், அப்படத்தின் மீது அனைவருக்கும் ஆசை இருக்கிறது. அதன் 2-ம் பாகம் பண்ணலாமா அல்லது வேறு படம் பண்ணலாமா என்று தெரியவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரன்...
‘விஸ்வம்பரா’ டீஸரில் இடம்பெற்றது ஏஐ காட்சிகள் என்று இயக்குநரின் தந்தை அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வெளியானது ‘விஸ்வம்பரா’ படத்தின் டீஸர். இந்த டீஸரின் காட்சிகள் இணையத்தில் கடும் எதிர்வினைகளை சந்தித்தது. இந்த எதிர்வினையினால் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படமும் தள்ளிவைக்கப்பட்டது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே மாற்றப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இப்படத்தின் இயக்குநர் வாஷிஸ்டாவின் தந்தை பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘விஸ்வம்பரா’ படத்தின் டீஸரில்...
‘குட் பேட் அக்லி’ வசூல் குறைவின்றி இருப்பதால், அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனை படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. முதல் நாளில் ரசிகர்கள் கொண்டாடினாலும், பலரும் இது ரசிகர்களுக்கான படம் என கருத்து தெரிவித்தார்கள். ஆனால், கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி...
’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம்.
ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட்...
மீண்டும் ஒரு முறை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் நேற்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தைத்...
புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடிகை தபு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி அடுத்து, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் விஜய்...
தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. சிவபிரகாஷ் இயக்கியுள்ள இதில் அவர் ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். முருகேஷ் பாபு வசனம் எழுதியுள்ளார். இ5 என்டர்டெயின்மென்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்...
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்திரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடலும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் மீண்டும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
அஜய் தேவ்கன், வாணி கபூர், ரிதேஷ் தேஷ்முக்...










