கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘அண்டர் 18’. ‘மெட்ராஸ்காரன்’ படத்தை தயாரித்த எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் பெருமாள்சாமி இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சரத்குமார், ராதிகா சரத்குமார், ஸ்ரீபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படம் பற்றி விக்ராந்த் கூறும் போது, “இது ஃபேமிலி டிராமா கதை. 18 வயதுக்கு கீழ்...
நான் சின்னத்திரை தொடர்களில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில், அதை விட்டுவிட்டு முழு நேரமாக சினிமாவில் கவனம் செலுத்த இயக்குநர் ஒருவர் அறிவுரை கூறியிருந்தார் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அதனால் இனி சினிமாதான் என்று முடிவு செய்திருந்தேன்.
அது 2004-ம் ஆண்டு. எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. “நான் பாண்டியன்னு புரொடக் ஷன் மேனேஜர் பேசுறேன்” என்றார். “சொல்லுங்க தம்பி“என்றேன். “பிரகாஷ்ராஜ் சாரோட டூயட் மூவிஸ் நிறுவனத்துல இயக்குநர் ராதாமோகன் ஒரு...
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம், ‘பென்ஸ்’. லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸின் அடுத்த படமாக உருவாகும் இதை பாக்கிய ராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் பாலியும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரவி மோகன் இணைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதில் சம்யுக்தா உள்பட பலர் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட், ஜி...
சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம்,‘கருப்பு’. ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். கடந்த 15-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் உலகளவில் ரூ.300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை...
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், இதுவரை உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வீரபத்ருடு’ என்ற பெயரில் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெளியான முதல் நாளிலில்...
தமிழில் ஏழாவது மனிதன், மண்வாசனை, சத்யா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, 18 வயசு உள்பட பல படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருப்பவர் சத்யேந்திரா (65). பெங்களூரைச் சேர்ந்த இவர், தொடக்கக் காலத்தில் பிரபல இயக்குநர் கிரிஷ் கர்னாட் இயக்கிய நாடகங்களில் நடித்துள்ளார்.
பின்னர் சென்னை வந்த அவர், தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தினார். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவால் நேற்று முன்...
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆக் ஷன் அட்வென்சர் காமெடி படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் ஜூலை 31-ல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘கருப்பு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது....
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுனின் ‘ஆக்ஷன் கிங்’ அடைமொழிக்கு தீனி போடும் விதமாக வெளியாகியுள்ளது ‘ப்ளாஸ்ட்’. ட்ரெய்லரிலேயே படத்தின் கதைக்களத்தை தெரியப்படுத்தி விட்டாலும் திரைக்கதையில் மேஜிக் செய்து வெற்றிபெற்றாரா இயக்குநர் என்பதை பார்க்கலாம்.
கராத்தே மாஸ்டரான ராஜாராம் (அர்ஜுன்) தனது மகள் நிலாவை (ப்ரீத்தி முகுந்தன்) சிறுவயதிலிருந்தே துணிச்சல் மிக்க பெண்ணாக வளர்க்கிறார். தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார். தனக்கு மட்டுமின்றி பிறருக்கு நடக்கும் அநீதிகளையும் தட்டிக் கேட்கிறார் நிலா.
ராஜாராமின்...
அதர்வா நடித்த ‘ஈட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவி அரசு. வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், தொடர்ந்து ‘ஐங்கரன்’ என்ற படத்தையும் இயக்கினார்.
அடுத்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மகுடம்’ படத்தை இயக்கிய அவர், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் ‘பைவ் சி’ஸ் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,...









