ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் இந்தி நடிகை நோரா பதேஹி, ஒரு பாடலுக்கு ஆடுகிறார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். அந்தப் பாடல் வைரலானது.
இதையடுத்து ‘கூலி’...
அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘ரெட்ட தல’.
கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். பிடிஜி யூனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார். டிச.25ம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், முத்தையா, கோகுல், கிஷோர் முத்துராமன், பாலாஜி வேணுகோபால் என பலர் கலந்து கொண்டனர்.
படம்...
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படத்தின் தெலுங்கு பதிப்பு நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 12, 2024-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘அயலான்’. அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், இதன் தெலுங்கு பதிப்பு வெளியாகவில்லை. சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வியாபாரத்தில் நடத்த சிக்கல்களால் வெளியாகவில்லை. ‘அயலான்’ தெலுங்கு பதிப்பு ஓடிடி தளங்களிலும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, டிசம்பர் 21-ம் தேதி ஜீ தெலுங்கு சேனலில்...
‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி அளித்ததால் வழக்கை முடித்து வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில்...
“தமிழகத்தில் உள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” என்று இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கொம்பு சீவி'. இதில் சரத்குமார், சண்முக பாண்டியன், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வரும் 19-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின்...
பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் நடிக்கும் திரைப்படம் ‘மெஜந்தா’. படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் என்ற பகவதி பெருமாள், சரத் ரவி, அர்ச்சனா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தரண் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்குப் பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதை, பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்குகின்றனர்.
“காதல், நகைச்சுவை...
பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா. நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான, ‘மண்டேலா: லாங் வாக் டூ ஃபிரீடம்’(2013), அமெரிக்கன் கேங்ஸ்டர் (2007), பசிபிக்ரிம் (2013), த டார்க் டவர் (2017), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), த சூசைட் குவாட் (2020) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பிலிருந்து வெளியேறி படம் இயக்குவதில் கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில்...
நடிகர் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கடந்த சில ஆண்டுகளாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு ஐஸ்வர்யா ராயோ, அபிஷேக் பச்சனோ கருத்துச் சொன்னதில்லை.
இந்நிலையில் அபிஷேக் பச்சன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு,...
‘மேயாதமான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்து ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்கியுள்ள படத்துக்கு ‘29’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்குவாட் நிறுவனங்கள் சார்பில் கார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ்...
திருப்பதி ஏழுமலையானை இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை நேற்று அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் நேற்று மாலை ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சென்றார். பின்னர் அவர் இரவு திருமலையில் தங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மருமகன்கள் பேரன்கள், உறவினர்கள்...
