அமெரிக்காவில் கடந்த 2004-முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்களாக வெளியான சின்னத்திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’.
இதில் மார்ட்டின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் டெய்லர் சேஸ். பின்னர் ‘எவ்ரிபடி ஹேட்ஸ் கிறிஸ்’ என்ற நகைச்சுவைத் தொடரிலும் தோன்றிய அவர், 2007-ம் ஆண்டு ஜேம்ஸ் பிராங்கோவின் ‘குட் டைம் மேக்ஸ்’ என்ற ஹாலிவுட் படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். அதில் யங் ஆடமாக...
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரவுடி ஜனார்த்தனா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஆனந்த் சி.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1980-களில் கிழக்கு கோதாவரியைக்களமாகக் கொண்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம்,...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது.
டி.ராஜேந்தர், கனிகா மற்றும் ஆலியா மான்ஸா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை, மணிமேகலை தொகுத்து வழங்கினார். கூமாபட்டி தங்கபாண்டி, ராவணன், சுரேஷ், விக்னேஷ், தமிழரசன் என பல யூடியூப் பிரபலங்கள் இதில் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.
கடந்த...
விக்ரம் பிரபு, புதுமுகம் அக்ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார்.
வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை (டிச.25) வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசும்போது,...
ஐமேக்ஸ் என்பது இமேஜ் மேக்ஸிமம் எனப்படும் பெரிய திரையைக் கொண்ட திரையரங்க வடிவம். திரையின் அகலத்தை விட உயரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட, முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் அமைப்பு.
திரையரங்கக் கட்டமைப்பு, திரை வடிவமைப்பு, அதிநவீன இரட்டை புரொஜெக் ஷன் தொழில்நுட்பம், துல்லியமான ஒலி அமைப்பு, கதை சொல்லும் கேமரா மொழி, படமாக்கும் முறை (கேப்சர்), நவீன மாற்றுச் செயல்முறை (மாஸ்டரிங்), மற்றும் வெளியீட்டுத் திட்டமிடல் (ரிலீஸ் ஸ்ட்ரேட்டஜி) ஆகிய அனைத்தையும்...
‘பேட்டில்ஷிப் பொடெம்கின்’ படத்தைத் திரையிட அனுமதி மறுப்பதா? – அடூர் கோபாலகிருஷ்ணன் விமர்சனம்
admin - 0
கேரள சர்வதேச திரைப்பட விழா, டிச.12ம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. நாளை வரை (டிச.19) இந்தப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சர்வதேச விழாக்களில் விருது பெற்ற பல கிளாசிக் திரைப்படங்கள் உள்பட 19 படங்களைத் திரையிட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
திரையிட அனுமதி மறுக்கப்பட்ட படங்களில், 1925-ம் ஆண்டு வெளியான சோவியத் திரைப்படமான ‘பேட்டில்ஷிப் பொடெம்கின்’, ‘தி ஹவர்...
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்ததாக நடிகை ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்.
'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தின் மூலம் கன்னடம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ருக்மிணி வசந்த். கடைசியாக ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படத்தில் 'கனகவதி' என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து ருக்மிணி கூறுகையில், "திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது...
சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45: தி மூவி’. இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25 வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.
இதில் சிவராஜ்குமார் பேசுகையில், “‘45’ என் 129-வது படம். என் முதல் படமான ‘ஆனந்த்’ செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும்...
தமிழ் திரைத்துறையினருக்காக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் திரைப்பட விருது விழா, ஜன.25 -ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இப்போது டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இதன் மூலம் திரைபிரபலங்களின் நேர்காணல்களை வெளியிட்டு வரும் அவர், அடுத்த கட்டமாக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம் ’ என்ற பெயரில் திரைப்படத் துறையினருக்கான விருது விழாவை நடத்துகிறார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் சித்ரா...
