மாதவன் நடித்து வரும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறான ‘ஜி.டி.என்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சிறிய அறிமுக டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் மாதவன் இருப்பதால், இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
‘ஜி.டி.என்’ படத்தினை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கி...
நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே லக்கநாயக்கன்பட்டியில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில் ‘ஷார்ட் கன்’ என்று அழைக்கப்படும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜீத்குமார் ஈடுபட்டார்.
கடந்த இரு நாட்களாக அவர் அங்கு தங்கி இந்தப் பயிற்சியை மேற்கொண்டார். இந்த கிளப்பில் அஜீத்குமார் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருவதால், அடிக்கடி இங்கு வந்து...
மலையாள நடிகரான அஜ்மல் அமீர், மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’, ‘கோ’, விஜய்யின் ‘கோட்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் பாலியல் ரீதியாக சில பெண்களிடம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ மற்றும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர். இவர் மீது இதற்கு முன்பும் பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, அதை மறுத்து...
‘பராசக்தி’ படப்பிடிப்பு நிறைவு: சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி திரைப்பட ஷூட்டிங் எப்போது?
admin - 0
‘மதராஸி’ படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். சுதா கொங்கரா இயக்கும் இதில் ரவி மோகன், லீலா, அதர்வா, பசில் ஜோசப், ராணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்குஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
1960-களில் நடக்கும் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது. அடுத்த ஆண்டு ஜன.14-ல் இந்தப்...
கிஷோர், தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘மெல்லிசை’.
‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைனை கொண்டுள்ள இப்படத்தை ‘வெப்பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான உறவை திரையில் பிரதிபலிக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன், “முதல் பார்வை...
‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பது தொடர்பாக, தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பதிப்புரிமை பெற்ற தனது பாடல்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் அதிக வருவாய் ஈட்டி வருவதாகக் கூறி சோனி மியூசிக், எக்கோ ரெக்கார்டிங், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம்,...
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜூனியர் என்டிஆர், ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடிக்கிறார். அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான ‘தேவரா’, ‘வார் 2’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்து ஒரு வெற்றி படம் அவசியம் என்ற...
விஜய், சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.
விஜய்யின் பழைய ஹிட் படங்கள் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ‘கில்லி’, ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களின் வரிசையில் ‘ப்ரண்ட்ஸ்’ படமும் இணைந்திருக்கிறது. இப்படத்தினை டிஜிட்டல் முறையில் 4கே தொழில்நுட்பத்தில் மாற்றி, நவம்பர் 21-ம் தேதி வெளியிடவுள்ளார்கள். இதற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான படம் ‘ப்ரண்ட்ஸ்’....
மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரன்வீர் – தீபிகா தம்பதியர்!
admin - 0
பாலிவுட் சினிமாவின் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியர் தங்கள் மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். துவாவின் படம் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இருவரும் தங்கள் மகளின் பெயரை அதிகாரபூர்வமாக துவா படுகோன்...
‘இந்திய சினிமா பார்த்திராத விஷயத்தை உருவாக்கி வருகிறார்’ – அட்லிக்கு ரன்வீர் சிங் புகழாரம்
admin - 0
இந்திய சினிமா பார்த்திராத விஷயத்தை அட்லி உருவாக்கி வருகிறார் என்று ரன்வீர் சிங் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
’சிங் தேசி சைனிஸ்’என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரப் படம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில், சிங் நிறுவன ஏஜென்டாக இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். இதை ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி...










