Google search engine
அருண் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை முத்தையா இயக்கவுள்ளார். திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அருண் விஜய், “அடுத்து நாயகனாக முத்தையா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ‘ரெட்ட தல’ படத்தினைத் தொடர்ந்து ‘பார்டர்’ படமும் விரைவில் வெளியாகும். அதுவும் விரைவில் வெளியாகவுள்ளது” என்று...
விஜய்யின் ‘ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன.15) விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது. தவெக தலை​வ​ரான நடிகர் விஜய் நடித்​துள்ள கடைசிப்​ படம் ‘ஜன​நாயகன்’. கேவிஎன் நிறு​வனம் தயாரித்​துள்ள இந்த படத்தை ஹெச்​.​வினோத் இயக்கியுள்​ளார். ஜனவரி 9-ம் தேதி உலகம் முழு​வதும் படத்தை வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். இதற்கான தொடக்ககட்ட பணிகள் நடந்து வந்தன....
தமிழ் சினிமாவின் வரலாற்றில் தொண்ணூறுகளின் காலகட்டம் ஒரு முக்கிய திருப்புமுனை என்றே சொல்லலாம். டிஜிட்டல் யுகம் மெல்ல அறிமுகமாகிக் கொண்டிருந்த நேரத்தில், படச்சுருளில் தமிழ் சினிமா தன்னுடைய படங்களை எடுத்துக்கொண்டிருந்தது. என்றாலும் ‘ரெட்’, ‘அலெக்ஸா’ போன்ற புதிய வகை கேமராக்களும், கம்யூட்டரை இசையமைப்புக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியும், பன்னாட்டுத் திரைப்படங்களைக் காண்பதற்கு வழிவகை செய்த உலகமயமாக்கலின் தாக்கமும் என 90களின் சினிமா தமிழ் சினிமாவுக்கு ஏற்றம் தந்த 10...
ஜனவரி 2-ஆம் தேதி வெளியான இந்து டாக்கீஸ் பக்கத்தில் ‘தாக்கம் தந்த 10 படங்கள்’ என்கிற தலைப்பில், 2025-இன் குறிப்பிடத்தக்க மிடில் சினிமாக்களைக் கவனப்படுத்தியிருந்தோம். அந்தப் பட்டியலின் தொடர்ச்சியாக, 2025-இல் மேலும் பல ரசனையான முயற்சிகளை இந்து டாக்கீஸ் கவனப்படுத்த விரும்புகிறது. உள்ளடக்கம், உயர்வான காட்சியாக்கம், நல்ல நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்களோடு தூய பொழுதுபோக்குத் தன்மையிலும் சிறந்து விளங்கி ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட மேலும் பல படங்களில் முதலில்...
மின்னலே படத்தின் இசை வெளியீட்டு விழா 11.01.2001 அன்று நடைபெற்று 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு ரசிகப் பார்வை இது... “ஹாரிஸ் ஜெயராஜுக்கு வந்து... நான் பெரிய ரசிகன். அவர் இளையராஜா மற்றும் ரகுமானின் கலவை. அந்தப் பாடல் இப்ப வரைக்கும் என்னுடைய விருப்பத்திற்குரிய பாடல் வரிசையில் இருக்கு” - இதைச் சொன்னவர் ‘எந்திர’னில் வசீகரனாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சொன்னது 2017 ‘காப்பான்’ திரைப்பட இசை...
 ‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78...
நான் நடிக்க வாய்ப்பு தேடும் போது எளி​தாக எனக்கு கிடைத்து விட​வில்​லை. எப்​படி​யா​வது சினிமாவில் இருந்​து​தான் ஆக வேண்​டும் என்று முடிவு செய்து தீவிர​மாக முயற்சி செய்​தும் பலனில்​லை. அதற்​காக ஒதுங்கி விட​வும் மனமில்​லை. நான் எங்கு சென்​றாலும் சினிமாவே என் மனம் முழு​வதும் இருந்​தது. ​நான் பல பேட்​டிகளில் சொன்​னது போல, ‘ஒரு படம் நடிச்சா ரெண்டு படம் ஃப்​ரீ’ என்று கூட ஒரு திட்​டத்தை அறிவிக்​கலாம் என...
விஜய்க்கு ‘பகவந்த் கேசரி’ மிகவும் பிடித்த படம் என்று அதன் இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். ’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்பது ட்ரெய்லர் வெளியான உடனே உறுதியாகிவிட்டது. இதனால் பலரும் அப்படத்தின் காட்சிகளை வைத்து கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி இது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அனில் ரவிபுடி அளித்த பேட்டியொன்றில் ‘ஜனநாயகன்’ தொடர்பாக, “விஜய்க்கு ‘பகவந்த்...
‘பராசக்தி’ படத்துக்கு எதிராக பரப்பப்படும் வன்மம் குறித்து படக்குழுவினர் காட்டமாக பதிவிட்டுள்ளனர். ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’, ஜனவரி 10-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’ வெளியானது. ’ஜனநாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள்...
நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்க இருக்​கிறார். இப்படம் பற்​றிய அறி​விப்பு இம்​மாத இறு​தி​யில் வெளி​யாகும் என்று கூறப்​படுகிறது. இதற்​கிடையே கார் பந்​த​யத்​தி​லும் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித். கடந்த ஆண்​டு, அபுதாபி, பார்​சிலோ​னா, மலேசியா உள்பட பல்​வேறு நாடு​களில் நடந்த கார் பந்தய போட்​டிகளில் தனது அணி​யினருடன் கலந்து கொண்ட அவர் இப்​போது, 24 ஹெச் சீரிஸ்- மத்​திய...