நடிகர் மம்மூட்டி - இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இருவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படத்துக்கு ‘பாதயாத்ரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பனி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக 1990-களில் வெளியான ‘விதேயன்’ மற்றும் ‘மதிலுகள்’ போன்ற கிளாசிக் படைப்புகளை தந்த இந்தக் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது கவனம் பெற்றுள்ளது.
இன்று...
திரெளபதி-2 படத்தை வெளியிட தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மகாமுனி அம்பலகாரர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னன் வீர வல்லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி-2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வீர வல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு...
‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் காவல் நிலையம்’ ஆகிய படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன், அடுத்து இயக்கியுள்ள திரைப்படம், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’.
2எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கும் இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், கவிதா பாரதி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுப.வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைக்கதை, வசனத்தை கவிதா பாரதியும் தயாள் பத்மநாபனும் இணைந்து...
ஆஸ்கர் விருதுகளின் 98 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை எந்தவொரு திரைப்படமும் செய்யாத சாதனையை 'சின்னர்ஸ்' திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.
இன்று (ஜனவரி 22) வெளியிடப்பட்ட 2026-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில், இந்தப் படம் மொத்தம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 'ஆல் அபௌட் ஈவ்' (1950), 'டைட்டானிக்' (1997) மற்றும் 'லா லா லேண்ட்' (2016) ஆகிய படங்கள் தலா 14 பரிந்துரைகளைப் பெற்றதே...
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை அவர் தத்தெடுத்து உள்ளார். இந்த யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை 6 மாதங்களுக்கு அவர் வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் இதற்கு முன் வண்டலூர் பூங்காவிலிருந்து...
கருப்பு – வெள்ளை ஒளிப்பதிவு: காலம் தாண்டி நிற்கும் சினிமாவின் ஆதி மொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 16
admin - 0
சினிமாவின் தொடக்கக் காலத்திலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக, கருப்பு-வெள்ளை என்பது சினிமாவின் ஆத்ம மொழியாகவே மலர்ந்திருந்தது. இன்று நாம் கோடிக்கணக்கான வண்ணங்கள் கொண்ட டிஜிட்டல் திரைகளில் படம் பார்த்தாலும், கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவு என்பது இன்றும் “வலிமையான கலைத் தீர்மானமாக” (ஆர்டிஸ்டிக் சாய்ஸ்) உருவெடுத்துள்ளது.
நவீன சினிமாவில் கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவு கதையை வகைப்படுத்தவும், காலகட்டங்களை உருவாக்கவும், மனித உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தவும் சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
கதையை வகைப்படுத்துதல் (செக்மெண்டிங் நரேடிவ்ஸ்)...
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் படத்துக்கு ‘புருஷன்’ என தலைப்பிட்டுள்ளனர். இதன் டைட்டில் புரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
விஷால் உடன் நடிகை தமன்னா மற்றும் நடிகர் யோகி பாபு இதில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஏசிஎஸ் அருண் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை வெங்கட் ராகவன் எழுதி உள்ளார்....
திரெளபதி-2 படத்தை வெளியிட தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மகாமுனி அம்பலகாரர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னன் வீர வல்லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி-2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வீர வல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு...
நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அனில் ரவிபுடி இயக்கிய இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சிரஞ்சீவி அறிக்கை வெளியிட்டுஉள்ளார்.
இந்நிலையில் அவர் இயக்குநர் பாபியுடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படம் அப்பா, மகள் உறவை பற்றிய படம் என்று கூறப்படுகிறது. இருவரும் இதற்கு முன் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் பணியாற்றி இருந்தனர்.
இதில்...
அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் படத்துக்கு ‘கான் சிட்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார்.
ஷான் ரோல்டன் இசை அமைக்கும் இப்படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். “ஒரு மிடில்...
