நடிகை சமந்தா, வருண் தவணுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இதன் புரமோஷனுக்காக வருண் தவானும், நடிகை சமந்தாவும் கேள்விக் கேட்டுக்கொள்ளும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் முன்னோட்டம் இப்போது பிரைமில் வெளியாகியிருக்கிறது.
அதில், வருண் தவண், “உங்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் எந்த விஷயத்துக்காக அதிகம் செலவு செய்திருக்கிறீர்கள்?" என சமந்தாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா, “அது என் ‘எக்ஸ்’-க்கு...
சின்னத்திரை நட்சத்திரங்களான அரவிந்த் ரியோ, காளிதாஸ், புவனேஸ்வரி ரமேஷ் பாபு, நித்யா ராஜ் உட்பட பலர் சினிமாவில் அறிமுகமாகும் படம், ’நெஞ்சு பொறுக்குதில்லையே’. ‘நவரச கலைக்கூடம்’ சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற பெயரில் பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவி தினேஷ்குமார் இணைந்து இயக்கியுள்ளனர். எம்.எல்.சுதர்சன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு அப்துல் கே.ரகுமான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம்பற்றி...
சித்தார்த் நடித்திருக்கும் ‘மிஸ் யூ’, வரும் 29-ம் தேதி வெளியாகிறது. காதல் கதையான இந்தப் படத்தை என்.ராஜசேகர் இயக்கி இருக்கிறார். ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடித்திருக்கும் இதில் மாறன், பாலசரவணன், கருணாகரன், சஸ்டிகா உட்பட பலர் இருக்கின்றனர். படத்தின் புரமோஷனில் தீவிரமாக இருக்கும் சித்தார்த்திடம் பேசினோம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல் கதையில நடிச்சிருக்கீங்க…
‘சித்தா’ படத்துக்கு கிடைச்ச வரவேற்புக்குப் பிறகு கலகலப்பான, ஜாலியான படம் பண்ணணும்னு ஆசை இருந்தது. அப்பதான்...
சமூக வலைதளத்தில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கு எதிராக அநாகரிகமான முறையில் கருத்து பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மாவை நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பிய நிலையில், ‘டிஜிட்டல் முறையில் அவர் ஆஜராக அனுமதிக்க வேண்டும்’ என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் அநாகரிமான முறையில்...
“கனிமொழிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனது கோயில் வழிகாட்டி அவர்தான். நான் எந்த ஊருக்கு போனாலும் கனிமொழி அக்கா அனுப்பும் ஆட்கள் தான் என்னை அழைத்துச் செல்வார்கள்” என்று இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றில் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினர். அதில் தங்கள் இருவருக்கும் இடையிலான நீண்டகால நட்பு குறித்து இருவரும் பல்வேறு...
“நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர். தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானிடம் கிட்டாரிஸ்டாக பணியாற்றிய மோஹினி தே தெரிவித்துள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் அவர் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இதையடுத்து சில சமூக ஊடகங்களிலும் யூடியூப்பிலும் இவர்கள் பற்றி...
‘தொலைக்காட்சியில் பொழுதுபோக்காளராக மக்கள் பார்த்தார்கள். அதையே திரையுலகிலும் செய்யத் தொடங்கினேன்’ என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் நடிகர்கள், இயக்குநர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் குஷ்பு - சிவகார்த்திகேயன் இடையிலான உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் குஷ்புவின் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.
அப்போது திரையுலகில் நடிகராக வலம் வருவது குறித்த கேள்விக்கு சிவகார்த்திகேயன், “தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு...
சல்மான் கானுடன் ரஜினி அல்லது கமல் இருவரில் ஒருவரை நடிக்க வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.
அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
தற்போது இப்படத்தின் கதையினை ‘மகதீரா’ பாணியில் உருவாக்கி இருக்கிறார் அட்லீ என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நிகழ்காலமும், அரசர் காலமும்...
‘புஷ்பா 2’ தயாரிப்பாளரை மேடையிலே கேள்வி எழுப்பி தேவி ஸ்ரீ பிரசாத் பேசிய பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது.
’புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசைப் பொறுப்பில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமன், சாம் சி.எஸ், அஜ்னிஷ் லோக்நாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இது தகவலாக வெளியானாலும், என்ன பிரச்சினை என்பது தெரியாமல் இருந்தது. இது குறித்து படக்குழுவினரும் அமைதி காத்து வந்தார்கள்.
இதனிடையே, ‘புஷ்பா 2’...
நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக எடுப்பது கடினம் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
கோவாவில் 55-வது சர்வதே திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய திரையுலகை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று வருகிறார்கள். இதில் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் நாகார்ஜுனா. அவரிடம் அவரது அப்பா நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக உருவாக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நாகார்ஜுனா, “நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுப்பதுதான் சிறந்தது...










