சின்னத்திரை நட்சத்திரங்களின் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’!

0
32

சின்னத்திரை நட்சத்திரங்களான அரவிந்த் ரியோ, காளிதாஸ், புவனேஸ்வரி ரமேஷ் பாபு, நித்யா ராஜ் உட்பட பலர் சினிமாவில் அறிமுகமாகும் படம், ’நெஞ்சு பொறுக்குதில்லையே’. ‘நவரச கலைக்கூடம்’ சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற பெயரில் பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவி தினேஷ்குமார் இணைந்து இயக்கியுள்ளனர். எம்.எல்.சுதர்சன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு அப்துல் கே.ரகுமான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம்பற்றி இயக்குநர்கள் கூறும்போது, “வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சினையை மையமாக வைத்து சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், இன்றைய இளைஞர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் படம் இது. கேரள மலைப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். டிசம்பரில் வெளியாகிறது” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here