மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் அஜித்தின் ‘தினா’, ஷங்கரின் ‘ஐ’, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் ‘ஒற்றக்கொம்பன்’ உட்பட சில மலையாளப் படங்களில் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படங்களில் நடிப்பதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கும் என...
எழுத்தாளரும் மாற்று சினிமா முன்னோடியுமான இயக்குநர் 'குடிசை' ஜெயபாரதி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.
பத்திரிகையாளராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர் ஜெயபாரதி. இவர் பெற்றோர் ராமமூர்த்தியும், சரோஜா ராமமூர்த்தியும் எழுத்தாளர்கள். வணிக திரைப்படங்கள் இல்லாமல் மாற்று சினிமா முயற்சி என்ற உறுதியுடன் ‘கிரவுட் பண்டிங்' முறையில் ‘குடிசை’ என்ற படத்தை இயக்கினார். 1979-ல் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது....
ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடுவது கடினமாகியுள்ளது என்று இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் தெரிவித்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பியல் துறை, இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி திரைப்பட இயக்கம் இணைந்து புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடக்கும் 12-வது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.6) துவங்கியது.
தொடக்க நிகழ்வில் இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் பேசுகையில்,...
சசிகுமார், சிம்ரனின் ‘டூரிஸ்ட் பேமிலி’ டைட்டில் டீசர் எப்படி? – இலங்கை தமிழில் கதைக்கும் கதாபாத்திரங்கள்
admin - 0
இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
சுமார் 03.52 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த டீசரில் கணவன், மனைவியாக நடித்துள்ள சசிகுமார் மற்றும் சிம்ரனும் தங்களது இரண்டு மகன்களுடன் குடும்பத்தோடு ஊரை விட்டு ஓடும் முடிவில் உள்ளனர். அதற்கான காரணம் சொல்லப்படவில்லை. இந்த படத்தின் வசனங்கள் இலங்கை தமிழ் பேச்சு...
அப்பா தவகுமார் (சந்தோஷ்), அம்மா விஜி (ஸ்ரீஜா ரவி), அண்ணன்கள் சரத்குமார் (விவேக் பிரசன்னா), பார்த்தி (பார்த்திபன் குமார்), தாத்தா ஏழுமலை (மோகனசுந்தரம்) ஆகியோருடன் வசித்து வரும் தமிழ் (உதய் கார்த்திக்), திரைப்பட இயக்குநராகும் ஆசையில் இருக்கிறார்.
அதற்கான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிய, ஒருவர் தயாரிக்க முன் வருகிறார். ஹீரோவாக நடிக்கத் தயாரிப்பாளரின் தம்பி கால்ஷீட் கிடைக்கிறது. அதற்கான ஒப்பந்தந்தில் கையெழுத்திடுகிறார், தமிழ். ஆனால் ஹீரோவுக்கு, கதைப் பிடித்திருக்கிறது,...
இந்தியன் 2’ படத்தில் நடித்தற்காக என் நடிப்பை என் வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
‘மிஸ் யூ’ திரைப்படம் வேறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும். இந்த படத்தில் என்னோடு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு காதல், நட்பு, குடும்பம் என ஒரு படம் அமைந்திருக்கிறது. ஒரு நல்ல படத்துக்கு நல்ல படம் என்கிற அடையாளத்தை ஆடியன்ஸ் தான் கொடுக்க வேண்டும்.
ஒரு படம்...
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ஜெயபாரதி காலமானார். அவருக்கு வயது 77.
தமிழில் முதல்முறையாக 1979ஆம் ஆண்டு கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரித்து இவர் இயக்கிய படம் ‘குடிசை’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. இதனையடுத்து ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, ‘உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
கடைசியாக 2010ஆம் ஆண்டில் ‘புத்திரன்’ என்ற...
நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கருணாகரன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார், தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா, அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சண்முகா...
முன்னணி டிஜிட்டல் தளமான மூவீ பஃப், டர்மெரிக் மீடியாவுடன் இணைந்து ‘பிக் ஷார்ட்ஸ் சீசன் 3 குறும்பட போட்டியை சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதில் நெல்லியன் கருப்பையாவின் ‘பீ லைக் குட்டியப்பா’ எனும் குறும்படம், முதன்மை பரிசான ரூ. 5 லட்சத்தைப் பெற்றது. முதலாவது ரன்னர்-அப் விருது, ‘அன்புடென்’ குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் வடிவேலுக்கும் 2-வது விருது ‘ரெண்டு’ குறும்படத்துக்காக பவன் அலெக்ஸுக்கும் 3-வது ரன்னர்-அப் விருது...
“மன வேதனை…” – ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சி நெரிசலில் பெண் பலியானது குறித்து படக்குழு உருக்கம்
admin - 0
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில், “மன வேதனை அடைந்தோம். ஆதரவு நல்குவோம்” என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ‘புஷ்பா 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு: “நேற்று (டிச.4) இரவு சிறப்பு திரையிடலின்போது நடைபெற்ற சோகமான சம்பவத்தால் நாங்கள்...










