ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில், கே.விஜய் பாண்டி தயாரித்துள்ள படம், ‘வித்தைக்காரன்’. அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கியுள்ளார். யுவகார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் நாயகனாக நடிக்கும் இதில் சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்பிரமணிய சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 23 -ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி செய்தியாளர்களிடம் நடிகர் சதீஷ் கூறியதாவது:
விமான நிலையத்தில் சிக்கி இருக்கும் ரூ.25 கோடி மதிப்புள்ள வைரத்தை மூன்று குழு கைப்பற்றத்...
ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஊர்வசி ரவுதெலாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதெலா, தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏராளமான ஆல்பம் பாடல்களிலும் தோன்றியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று (பிப்.25) ஊர்வசி ரவுதெலா தனது...
பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் இருந்து தொடங்கி 2898-ல் முடிகிறது என்று அப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான்...
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ளனர்.
செப்.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்...
‘டான்ஸிங் ரோஸ்' ஷபீர் கல்லரக்கல், மிர்ணா, தீப்தி, இந்திரஜித் உட்பட பலர் நடித்துள்ள படம், 'பர்த்மார்க்'. ஸ்ரீராம் சிவராமன் தயாரித்துள்ள இந்தப் படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதர் கூறியதாவது:இயற்கை முறை பிரசவம் பற்றி பேசும்படம் இது. அறுவைசிகிச்சை இல்லாமல் இயற்கையான பிரசவத்துக்கு இந்தியாவில் சில கிராமங்கள்...
நாகர்கோவில் அருகிலுள்ள அறுகு விளையில் நூறாண்டுகளாக நடந்துவருகிறது புறா பந்தயம். அதில் ராஜலிங்கத்தின் (சையத் மஜீத்) குடும்பமும் ஒன்று. இந்தப் புறா பந்தயத்தால் வாழ்க்கை நாசமாவதாக நினைக்கும் அவரின் அம்மா சரஸ்வதி (விஜி சேகர்),லிங்கத்தைப் படிக்க வைத்து அதிலிருந்து திசைத் திருப்ப நினைக்கிறார். ஆனால், அம்மாவை ஏமாற்றிவிட்டு புறா பந்தயத்தில் மனதைச் செலுத்துகிறார் லிங்கம். இந்தப் பந்தய புறா வாழ்க்கை, அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் என்ன மாதிரியான வில்லங்கங்களை...
நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தபு, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு கதைப் பிடித்திருந்தால் நடிக்கச் சம்மதிக்கிறேன். ஓர் இயக்குநரின் கடந்த கால தோல்விகளை வைத்து, அந்த இயக்குநரை எடை போடுவதில்லை. அப்படி ஏன் மதிப்பிட வேண்டும்? புரி ஜெகன்நாத் இயக்கும் படம்...
தேசிய திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக இருந்த சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஆகிய பிரிவுகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
தேசிய விருதுகள் மற்றும் பரிசுத் தொகைகளை சீரமைப்பதற்கான குழு ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையில் பேரில், 70-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சில...
ரஜினி நடித்துள்ள 'வேட்டையன்', அக். 10-ம் தேதி ரிலீஸாகிறது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.அனிருத் இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் சத்யராஜ், ரஜினியின்...
“அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டும் சிறந்த மனிதர் வெற்றி துரைசாமி” – வெற்றிமாறன் உருக்கம்
admin - 0
“எப்போதும் சிரித்துக்கொண்டு, அன்புடன் பழகும் மனிதர். மனிதர்களுடன் மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுடனும் அன்பாக இருக்கும் மனிதர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு” என இயக்குநர் வெற்றிமாறன் கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார்.திரைப்பட இயக்குநர் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “வெற்றி துரைசாமி சினிமா தொடர்பான இடங்களில் தன்னை அறிமுகப்படுத்தும்போது, என்னுடைய மாணவர் என்று தான் அறிமுகம் செய்வார். என்னிடம்...










